பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ. 16,557!

0
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - பிரபல நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ. 16,557!
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - பிரபல நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ. 16,557!
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ. 16,557!

நாமக்கல் மாவட்டத்தில் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் 12ம் வகுப்பு முடித்த பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். தற்போது தனியார் நிறுவனங்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. இந்த முகாம்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பலருக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் நாளை (அக்.14) நாமக்கல் மாவட்டத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இதில் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பில் இளநிலை தொழில் நிபுணர்கள் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக 16,557 மற்றும் போனஸ் தொகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் ‘இவர்கள்’ கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் – வெளியான அதிரடி அரசாணை!!

Exams Daily Mobile App Download

இந்த வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லத்துவாடியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். மேலும் மேற்படிப்பிற்கான வாய்ப்புகளும் அளிக்கப்படும். அத்துடன் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் இடங்கள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!