நாட்டில் சம்பளத்தினை உயர்த்த ஊழியர்கள் போராட்டம் – திண்டாடும் அரசு!

0
நாட்டில் சம்பளத்தினை உயர்த்த ஊழியர்கள் போராட்டம் - திண்டாடும் அரசு!
நாட்டில் சம்பளத்தினை உயர்த்த ஊழியர்கள் போராட்டம் - திண்டாடும் அரசு!
நாட்டில் சம்பளத்தினை உயர்த்த ஊழியர்கள் போராட்டம் – திண்டாடும் அரசு!

பிரஸல்ஸில் ஏராளமான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி, அதிகரிக்கும் விலைவாசியை எதிர்த்தும் சம்பள உயர்வு கேட்டும் மற்றும் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மக்கள் போராட்டம்:

பிரஸல்ஸில் , பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ அரசியல், அமெரிக்க அரசியல், ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பொது மக்களின் வாழ்வாதாரம் பற்றி அக்கறை இல்லாமல், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பணத்தை செலவிடுங்கள், ஆயுதம் வாங்க செலவு செய்ய வேண்டாம் மற்றும் கூடுதல் சம்பளம் வழங்க முன் வாருங்கள் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தினால் பிரஸ்ஸல்சில் இயல்பு வாழ்க்கை ஏறக்குறைய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் இந்த போரட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து பெல்ஜியத்தில் பணவீக்கம் 9% ஆக அதிகரித்தது. உக்ரைன் போரினாலும் ரஷ்யா மீதான தடையினாலும் சப்ளை சங்கிலித் தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஆனால் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட பெல்ஜியம் நன்கு பாதுகாப்பாக உள்ளது, பணவீக்கத்துக்குத் தகுந்தவாறு சம்பளம் மாறும் வகை இங்கு தான் உள்ளது என்கிறார். மேலும் ஏறக்குறைய விலை உயர்வு, பொருட்களுக்கான செலவீனம் அதிகரிப்புக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற எதிர்ப்புக்கள் நடந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் போர், ஆயுதம், விலைவாசி உயர்வு, கார்ப்பரேட் ஆதரவு லாபி அரசுகள் ஆங்காங்கே நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அரசியல்-பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here