SBI வங்கியின் டெபிட் கார்டு மூலம் EMI ஷாப்பிங் சேவை – முழு விவரம் இதோ!

0
SBI வங்கியின் டெபிட் கார்டு மூலம் EMI ஷாப்பிங் சேவை - முழு விவரம் இதோ!
SBI வங்கியின் டெபிட் கார்டு மூலம் EMI ஷாப்பிங் சேவை - முழு விவரம் இதோ!
SBI வங்கியின் டெபிட் கார்டு மூலம் EMI ஷாப்பிங் சேவை – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி கடன் வழங்குநரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்கள், ஷாப்பிங் செய்யும் போது டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தும் EMI வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டெபிட் கார்டு சேவை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான சேவைகளை எளிதாகியுள்ளது. அந்த வரிசையில் கடைகளில் இருந்து டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் SBI வாடிக்கையாளர்களுக்கு EMI வசதியை வழங்குகிறது. இது தவிர SBI வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மூலம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் போர்ட்டல்கள் மூலமும் ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளின் போதும் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.

அரசு பள்ளிகளுக்கு 5000 ஆசிரியர்கள் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!

அந்த வகையில் டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்காக SBI வங்கி பூஜ்ஜிய செயலாக்க கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த டெபிட் கார்டு EMI ஆன்லைன் சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • SBI டெபிட் கார்டை POS இயந்திரத்தில் ஸ்வைப் செய்யவும்.
  • அதில் Brand EMI – Bank EMI என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது தொகையை உள்ளிடவும்.
  • PIN எண்ணை உள்ளிட்டு OK கொடுக்கவும்.
  • இந்த பரிவர்த்தனைக்கு பிறகு கடன் தொகை முன்பதிவு செய்யப்படுகிறது
  • கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய சார்ஜ் ஸ்லிப்பை அச்சிட்டு
  • வாடிக்கையாளர் அதில் கையெழுத்திட வேண்டும்.
SBI டெபிட் கார்டு ஆன்லைன் EMI சேவைகளுக்கு,
  • மொபைல் எண் மூலம் அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் உள்நுழையவும்.
  • தேவையான பிராண்ட்டை தேர்ந்தெடுத்து பணம் செலுத்துவதற்கு தொடரவும்.
  • இப்போது பல்வேறு கட்டண விருப்பங்களில் இருந்து EMI விருப்பத்தை தேர்ந்தெடுத்து,
  • பின்னர் SBI வங்கியை தேர்ந்தெடுக்கவும்
  • தொகை பெறப்பட்டவுடன் தொடரவும்.
  • இப்போது SBI உள்நுழைவு பக்கம் தோன்றும்.
  • இணைய வங்கி அல்லது டெபிட் கார்டு சான்றுகளை உள்ளிடவும்.
  • கடன் பதிவு செய்யப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் காட்டப்படும்.
  • இவை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆர்டர் பதிவு செய்யப்படும்.

SBI டெபிட் கார்டு கடன் தொகை மற்றும் வட்டி விகிதத்தை பொருத்தளவு, வாடிக்கையாளர்கள் ரூ.8000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடனை 2 வருடங்கள் MCLR உடன் 7.50% பயனுள்ள வட்டி விகிதத்தில் பெறலாம். SBI டெபிட் கார்டுகளுக்கான கடன் காலம் 6, 9, 12 மற்றும் 18 மாதங்களாகும். தொடர்ந்து SBI டெபிட் கார்டு கடன் மற்றும் EMI தகுதியை பொருத்தளவு, வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து DCEMI க்கு 567676 என்ற எண் மூலம் தகவல் அனுப்பி தங்கள் தகுதியை சரிபார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!