ஜியோ (Jio) வழங்கும் அவசர கால டேட்டா பேக் – ரீசார்ஜ் செய்வது எப்படி?

0
ஜியோ (Jio) வழங்கும் அவசர கால டேட்டா பேக் - ரீசார்ஜ் செய்வது எப்படி?
ஜியோ (Jio) வழங்கும் அவசர கால டேட்டா பேக் - ரீசார்ஜ் செய்வது எப்படி?
ஜியோ (Jio) வழங்கும் அவசர கால டேட்டா பேக் – ரீசார்ஜ் செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டேட்டா பேக்குகள் முடிவடையும் காலத்தில் கூடுதலாக டேட்டா சேவைகளை பெற்றுக் கொள்ள ஒரு புதிய Emergency Data லோன் வசதி வெளியிடப்பட்டுள்ளது.

டேட்டா கடன் வசதி

ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அவசர கால உதவியாக எமர்ஜென்சி டேட்டா லோனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த வசதிகள் மூலம் ஜியோ பயனர்கள் தங்களது தினசரி டேட்டாவுடன் கூடுதல் டேட்டா சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த டேட்டா வுக்கான தொகையை பயனர்கள் பின்னர் செலுத்தலாம். இவ்வகையான புதிய கடன் சேவைகள் மூலம் ஜியோ பயனர்கள் தங்களது அவசர கால உதவிக்காக, எளிய நடைமுறைகள் மூலம் அதிவேக டேட்டா சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

  • இதற்காக உங்கள் மொபைலில் MyJio செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • பிறகு Menu பக்கத்திற்கு செல்லவும்.
  • இதில் Emergency Data Loan என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • அவசர தரவு கடன் ஆப்ஷனில் Proceed என்பதைக் கிளிக் செய்க.

TN Job “FB  Group” Join Now

  • அவசர கடனைப் பெற Get Emergency Data என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு Activate now என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கான கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கடன் திட்டத்தின் விலை குறித்து கூறுகையில், ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் 1 ஜிபி அளவு கூடுதல் டேட்டாக்களை பெற்றுக்கொள்ள ரூ .11 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த வகையில் 5 முறை நீங்கள் கடன் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

  • இந்த சேவைகளை பெற்றுக் கொண்ட பின்னர், அதற்கான தொகையை செலுத்த,
  • உங்கள் மொபைலில் MyJio செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • அதில் மெனு பக்கத்திற்கு செல்லவும்.
  • Emergency Data Loan என்பதை தேர்வு செய்யவும்.
  • இப்போது, அவசர தரவு கடன் பக்கத்தில் Proceed என்பதைக் கிளிக் செய்க.
  • பிறகு Emergency data Loan ல் கட்டணத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • பணம் செலுத்துவதற்கான மொத்த கட்டணம் காட்டும்.
  • இதில் உங்களுக்கு தேவையான டேட்டா லோனை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!