ட்விட்டரில் இனி இந்த 2 பிரச்சனைகள் இருக்காது.. எலான் மஸ்க் கொடுக்கவுள்ள புதிய அப்டேட்!
ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் விளம்பரமில்லாத டிவிட்டர் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது ட்விட்டர் வாசிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.
விளம்பரம் இல்லாத ட்விட்டர்:
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் சமூகவலைதளமான டிவிட்டரை கையகப்படுத்தினார். அதில் இருந்து ட்விட்டரில் பல்வேறு அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறார். ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டி வரும் இவர் தற்போது புதிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார். குறிப்பாக அவர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற முதல் நாளே முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்களை வெளியேற்றினார். இந்நிலையில் ட்விட்டரில் விளம்பரத்தை நீக்குவது குறித்து ஒரு புதிய ட்விட் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி, “ட்விட்டரில் விளம்பரங்கள் மிகவும் பெரிய அளவிலும், அடிக்கடியும் வருகிறது. வரும் வாரங்களில் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என பதிவிட்டுள்ளார். ட்விட்டரின் சந்தா சேவையானது பயனர்களுக்கு விளம்பரமில்லாத ட்வீட்களை காண்பிக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் விளம்பரம் இன்றி ட்விட்டர் தளத்தை அணுகும் வகையில் புதிய சந்தாதாரர் திட்டத்தை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்கின் அறிவிப்பு இணைய பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.