TNPSCல் 7ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தகுதி தேர்வு – முக்கிய அறிவிப்பு!

0
TNPSCல் 7ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தகுதி தேர்வு - முக்கிய அறிவிப்பு!
TNPSCல் 7ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தகுதி தேர்வு - முக்கிய அறிவிப்பு!
TNPSCல் 7ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தகுதி தேர்வு – முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய இராணுவக் கல்லூரியில் சேர மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தகுதி தேர்வு:

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் இருந்து போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதன் அடிப்படையில் TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் ( சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூலை 2023 பருவத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழைக்கு இதுவரை 19 பேர் பலி, 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை அறிக்கை!

இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1.1.2023 ஆம் தேதி கணக்கீட்டின்படி 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராக அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்டமாக எழுத்து தேர்வு வரும் ஜூலை 2023 அன்று நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது. இதையடுத்து நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். இந்த TNPSC RIMC தேர்வு ஆனது சென்னையில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.மேலும் தகுதியானவர்கள் அனைவரும் வரும் https://www.tnpsc.gov.in/ அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைய முகவரி மூலம் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!