தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – மின்னகம் நுகர்வோர் சேவை!

0
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு - மின்னகம் நுகர்வோர் சேவை!
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு - மின்னகம் நுகர்வோர் சேவை!
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – மின்னகம் நுகர்வோர் சேவை!

தமிழகத்தில் உள்ள மூன்று கோடியே பத்து லட்சம் மின் இணைப்புதாரர்களின் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கும், சந்தேகங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க தமிழக முதல்வர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி “மின்னகம்” என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் திறந்து வைத்து அதற்கான பிரத்யேகமான 94987 94987 என்ற கைப்பேசி எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.

மின்னகம் சேவை:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல இடங்களில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் பயிலும் மாணவர்களும், வீடுகளில் இருந்து பணிபுரிவோரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள மூன்று கோடியே பத்து லட்சம் மின் இணைப்புதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!

அதன்படி, அவர்களுக்கு மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற/இறக்கம், உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள்/புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க, “மின்னகம்” என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த புதிய மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. அதற்கான பிரத்யேகமான 94987 94987 என்ற கைப்பேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மையத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு 65 நபர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளுக்கு 195 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் புகார்களை கணினி மூலமாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு, CC-MAC மென்பொருள் தொழில்நுட்பம் வாயிலாக தானியங்கி Whatsapp மூலம் உடனடியாக அனுப்பப்பட்டு, பிறகு அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட கைப்பேசி எண்ணிற்குப் புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அந்த புகார்கள் சரி செய்யப்பட்டதும். அந்த தகவலும் குறுந்செய்தியாக அனுப்பப்படும். மேலும் தமிழ்நாடு முழுவதும் சமூகவலைதளம் (Facebook, Twitter, Instagram) மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு சமூக வலைத்தள அமைப்பு (Social Media Cell) அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here