ஜூன் 25 வரை தினசரி 3 மணி நேரம் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

1
ஜூன் 25 வரை தினசரி 3 மணி நேரம் மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
ஜூன் 25 வரை தினசரி 3 மணி நேரம் மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
ஜூன் 25 வரை தினசரி 3 மணி நேரம் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக இன்று (ஜூன் 19) முதல் வருகிற 25 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தினசரி 3 மணி நேரம் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். இதனால் 6 மாதங்களாக மின் சாதன பராமரிப்பு பணிகள் நடத்தப்படவில்லை.

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்ப பதிவு – நாளை கடைசி தேதி!

இதனால் பல இடங்களில் முன் அறிவிப்பு இன்றி மின்தடை மற்றும் பழுது ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளன. இதனால் ஒவ்வொரு இடமாக மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக இன்று (ஜூன் 19) முதல் வருகிற 25 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தினசரி 3 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஸ்ரீபெரும்புதுார் மின் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 19) சேந்தமங்கலம், புதுப்பட்டு, சோகண்டி, காந்துார், பண்ணுார், ஆரனேரி, வளர்புரம், மண்ணுார் ஆகிய இடங்களிலும், ஜூன் 22 ஆம் தேதி அயிமச்சேரி, சுங்குவார்சத்திரம், காந்திப்பேட்டை, உளுந்தை, ஏ.என்.கண்டிகை, கிளாய் ஆகிய இடங்களிலும், ஜூன் 23 ஆம் தேதி மேவலுார்குப்பம், நயப்பாக்கம், தண்டலம் ஆகிய இடங்களிலும், ஜூன் 24 ஆம் தேதி நாவலுார் குப்பம் பகுதியிலும், ஜூன் 25 ஆம் தேதி, சென்னாக்குப்பம், இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், கீவலுார் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!