தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து அரசின் விளக்கம் – தினகரன் கோரிக்கை!

0
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து அரசின் விளக்கம் - தினகரன் கோரிக்கை!
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து அரசின் விளக்கம் - தினகரன் கோரிக்கை!
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து அரசின் விளக்கம் – தினகரன் கோரிக்கை!

தமிழக மக்களுக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் அதிகமாக கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டண உயர்வு:

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் தங்களது மின் கட்டண விவரத்தை தங்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்னும் வசதியையும் அறிமுகப்படுத்தியது. தற்போது தமிழக மக்கள் பலருக்கு கூடுதல் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் குறைப்பு – ஆணையர் ஆலோசனை!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் பலர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டில் முடங்கி இருந்தனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 560 ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜூன் மாதத்தின் போது 2500 ரூபாய் கட்டணம் கணக்கிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போல் பல லட்சக்கணக்கான மக்கள் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல என்றும் கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டண கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!