மின்துறை இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!

0
மின்துறை இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்கள் 2022 - விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!
மின்துறை இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்கள் 2022 - விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!
மின்துறை இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!

கொரோனா காலத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தவர்களும் வருட கணக்கில் காத்திருந்தனர். தற்போது நிலை சீராகி அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுவை மின் துறை இளநிலைப் பொறியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் எந்த ஒரு அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டனர். மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை அனைத்து துறைகளிலும் தற்போதைய தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகளும், தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மாநிலம் முழுவதும் அரசால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2022

இந்நிலையில் புதுவை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, புதுவை மின் துறையில் காலியாக உள்ள 42 இளநிலைப் பொறியாளர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பதவிக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மின் துறை தெரிவித்தது. இதுகுறித்து புதுவை அரசின் மின் துறை செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த செய்தி குறிப்பில், புதுவை அரசின் மின் துறையில் 42 இளநிலைப் பொறியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத ஊதியம் ரூ.33 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வரும்18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்த பதவிக்கு விண்ணப்பிப்போர், நலிவடைந்த பிரிவினா் 30 வயதுக்கு மிகாமலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 33 வயதுக்கு மிகாமலும், அட்டவணை, பழங்குடியினத்தவா் 35 வயதுக்கு மிகாமலும், மாற்றுத் திறனாளிகள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு சான்றிதழ், அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் வருகிற 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மின் துறை மேற்பாா்வை பொறியாளா், மின் துறை தலைவர் அலுவலகம், எண் 137, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, புதுச்சேரி – 605001 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!