தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கூடிய விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜன் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

மின்சார பேருந்து :

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்தி வருகிறது. அதன்படி போக்குவரத்து துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கினார். மேலும் பேருந்து கட்டணமும் குறைக்கப்பட்டது. இதனால் அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் அனைத்து பேருந்து பணிமனைகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

தமிழக காவல்துறையில் 14,137 காலிப்பணியிடங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

மேலும் மாற்றுத்திறனாளர் பயணிக்கும் வகையில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நான்கு வழித்தடங்களில் செல்லக்கூடிய 7 பேருந்துகளை அமைச்சர் ராஜகன்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் அறிவிப்பால் போக்குவரத்து துறைக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மக்களின் சேவைகளாக தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தமிழகத்தில் கூடிய விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதற்காக மின்சார வாகனங்கள் அறிமுகப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் எளிதில் வாங்குவதற்காக மத்திய அரசு சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த உதவித் தொகையானது 10 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!