மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறை விபரங்கள்!

0
மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு - eKYC செயல்முறை விபரங்கள்!
மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு - eKYC செயல்முறை விபரங்கள்!
மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறை விபரங்கள்!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கான கட்டாய eKYC ஐ முடிப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31, 2022 முதல் மே 22, 2022 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் PM Kisan இணையதளத்தின் படி, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். எனவே பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

eKYC செயல்முறை:

பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் ஆனது, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை மூன்று சம தவணைகளாக, அதாவது தவணைக்கு ரூ.2000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11 வது தவணை ஏப்ரல் 2022 இல் வெளியிடப்படும். இதனிடையே பிஎம் கிசான் பயனாளிகள் கட்டாயம் eKYC செயல்முறையை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடுத்த தவணை தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

eKYC செயல்முறைக்கு மார்ச் 31 ஆம் தேதி இறுதி காலக்கெடுவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், PM கிசான் இணையதளத்தில், “அனைத்து PM-KISAN பயனாளிகளுக்கும் eKYC இன் காலக்கெடு 22 மே 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை எந்த பிரச்சனையும் இன்றி கிடைக்க, ஒவ்வொரு PM-KISAN பயனாளிகளும் PM கிசான் இணையதளத்தில் eKYC செயல்முறையை அப்டேட் செய்து இருக்க வேண்டும். இதுவரை செய்யாதவர்கள் வரும் மே மாதத்திற்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

eKYC செயல்முறை:

1.PM கிசானின்  https://pmkisan.gov.in/ அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில், eKYC விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. உங்கள் ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்யவும்

4.உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும். இதை தவிர்த்து KYC சரிபார்ப்பைப் பெறுவதற்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று அவர்களின் ஆதார் அட்டையைக் காண்பித்து இந்த அப்டேட்டை முடிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!