பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மதிய உணவுத்திட்டத்தில் முட்டை வழங்க அரசு முடிவு!

0
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மதிய உணவுத்திட்டத்தில் முட்டை வழங்க அரசு முடிவு!
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மதிய உணவுத்திட்டத்தில் முட்டை வழங்க அரசு முடிவு!
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மதிய உணவுத்திட்டத்தில் முட்டை வழங்க அரசு முடிவு!

மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராக வரும் எதிர்ப்பையும் மீறி, பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டத்தை பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

மதிய உணவுத் திட்டம்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடையே ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றை தடுக்கும் விதமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை சில மதங்களை சார்ந்த மாணவர்களை பாதிக்கும் என்று அதற்கு எதிராக கருத்துக்கள் வெளியாகி வந்தது. இருப்பினும் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கர்நாடகா மாநில அரசு தற்போது மேற்கொண்டு வருகிறதாக ஊடக அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

ஆரம்பத்தில், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சில வடக்கு கர்நாடகா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை கொடுக்கப்பட்டது. இந்த திட்டமானது டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை அமல்படுத்தப்பட்டது. இந்த மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கிய நடவடிக்கை பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்றது. இப்போது இந்த திட்டத்தை மார்ச் 2022க்கு பிறகு நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரிடையே இருந்து கோரிக்கை பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா அரசாங்கம், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கி வரும் நிலையில், முட்டை எடுத்துக்கொள்ளாத மாணவர்களுக்கு பழங்களை வழங்குவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு முட்டைக்கு ரூ.6.50 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘கர்நாடகா அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here