‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகருக்கு திருமணம் – தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய நடிகை! வைரலாகும் வீடியோ!

0
'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகருக்கு திருமணம் - தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய நடிகை! வைரலாகும் வீடியோ!
'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகருக்கு திருமணம் - தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய நடிகை! வைரலாகும் வீடியோ!
‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகருக்கு திருமணம் – தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய நடிகை! வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் பிரபலங்கள் பல ஒரே சீரியல்களில் நடித்து காதலித்து திருமணம் கொண்ட அபி நவ்யா மற்றும் தீபக் அவர்களின் திருமண வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தாலி கட்டியதும் வெக்கப்பட்டு அபி அழும் காட்சிகள் ரசிகர்கள் மனதை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தீபக் – அபிநவ்யா திருமணம்:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் தீபக் மற்றும் அபி நவ்யா ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். முதலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். தீபக் தற்போது தொடங்கி உள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக் பாஸ்’ ராஜு – ப்ரோமோ ரிலீஸ்!

அதில் தீபக்கும் இவருடன் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் அதன் மூலம் இருவரும் காதலித்து வீட்டில் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் சுற்றம் சூழ கோலாகலமாக நடைபெற்றது. மணப்பெண் கோலத்தில் அபி நவ்யா செம அழகாக இருந்தார், அதே போல தீபக் மாப்பிள்ளையாக இருக்க, அபிநவ்யா கழுத்தில் காதலுடன் தீபக் தாலி கட்டுகிறார். அப்போது தன்னுடைய காதல் கணவரை கரம் பிடித்த சந்தோஷத்தில் அபி கண்ணீர் சிந்துகிறார்.

மீண்டும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – ரசிகர்கள் உற்சாகம்!

அவர்களின் திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் அவர்களின் வரிசையில் இவர்களும் இணைந்து இருக்கின்றனர். அவர்களது திருமண வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here