விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் ஜோடிகளாக இணையும் பிரபலங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் ஜோடிகளாக இணையும் பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் ஜோடிகளாக இணையும் பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் ஜோடிகளாக இணையும் பிரபலங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல் ஆன ஈரமான ரோஜாவே சீரியல் முதல் பாகம் முடிந்துள்ள நிலையில், விரைவில் சீசன் 2 ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், அதில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஈரமான ரோஜாவே 2:

விஜய் டிவியில் சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் பவித்ரா மற்றும் சீரியலில் முதன் முறையாக அறிமுக ஆன திரவியம் இவர்கள் இருவரையும் கதையின் நாயகன், நாயகியாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் ஈரமான ரோஜாவே. கதையில் சில மாதங்களுக்கு மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், குமரன் அந்த தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் பிற்பகலில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை அடைந்தது. பிற்பகல் நேரத்தில் வரும் எந்த சீரியலும் இந்த அளவு வெற்றியை பெற்றதில்லை.

பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு வரும் ரஞ்சித், பிரியா ராமனை தடுக்கும் கோபி – ஸ்பெஷல் எபிசோடு!

நாளுக்கு நாள் ஈரமான ரோஜாவே சீரியலின் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள். முதன்முறையாக கதாநாயகியாக நடித்த பவித்ரா, மலர் கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த இந்த தொடர் மூன்று வருடங்கள் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. இதனால் சமீபத்தில் ஈரமான ரோஜாவே சீரியலின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த தொடரின் மூலம் பிரபலமடைந்த ஜோடியின் சாய் காயத்திரி மற்றும் ஷியாம். இவர்கள் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொள்வது போல் காட்சிகள் வரும். எதிர்பாராத விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்தது.

சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஈரமான ரோஜாவே தொடரை பிரான்சிஸ் கதிரவன் முன்னர் இயக்கி வந்தார். அதன் பிறகு ரிஷி என்பவர் கதையை இயக்கினார். ஒளிப்பதிவாளராக ரமேஷ் துரை பணியாற்றினார். இந்த தொடரின் முடிவினால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், தேன்மொழி BA சித்தார்த் ஹீரோவாகவும், பிக்பாஸ் கேபிரியல்லா ஹீரோயினாகவும் நடிக்க ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது தான். இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!