ஆசிரியர் தேர்வு வாரியம் TNPSC உடன் இணைப்பா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

0
ஆசிரியர் தேர்வு வாரியம் TNPSC உடன் இணைப்பா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
ஆசிரியர் தேர்வு வாரியம் TNPSC உடன் இணைப்பா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
ஆசிரியர் தேர்வு வாரியம் TNPSC உடன் இணைப்பா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்துடன் இணைக்கப்படாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கமளித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம்:

தமிழகத்தில் ஆசிரியர் கல்வி கற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேர TRB மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்த TRB அமைப்பு ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்துகிறது. டெட், டிஆர்பி தேர்வுகள் நடந்தப்பட்டு ஆசிரியர் தேர்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ssc

தற்போது தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து கல்வித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வாணையத்தை கலைத்து தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவு – சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!!

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைத்தால் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தொய்வுநிலை ஏற்படும். ஆசிரியர் தேர்வாணையத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புதுப்பிக்க வேண்டும். காலிப்‌ பணியிடங்கள்‌ உடனடியாக நிரப்ப வேண்டும்‌ என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் இணைக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் கற்பனையானது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here