தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்கள் அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இறுதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊழியர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் கிடைப்பதில்லை என்பதால் இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மத்திய அமைச்சகத்தின் புதிய விதிகள் அறிவிப்பு!

இந்த நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய தொகை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஒரு கடிதம் ஒன்றில் செயல்முறையை அனுப்பியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்கள் அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இறுதி தொகையினை உடனடியாக அவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் 4 மாதங்களுக்கு முன் அவர்களின் விவரங்களை மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் 2.5.2022 முதல் 1.6.2022 வரை பொது வருங்கால வைப்பு நிதியில் விடுப்பட்டுள்ள சந்தா தொகையினை சரி செய்து சரி செய்யப்பட்ட அவர்களின் விவரங்களை மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here