தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்வி திட்டம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்வி திட்டம் - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்வி திட்டம் - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்வி திட்டம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க STEM வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் கருவி, நடமாடும் ஆய்வகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முக்கிய அறிவிப்பு:

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் STEM திட்டத்தை ஜூன் 20 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (Science, Technology, Engineering and Mathematics – STEM) ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களைச் சென்றடையும் வகையில் கோடைகாலப் பயிற்சி வகுப்பை சென்னை ஐஐடி நடத்துகிறது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர்” இந்த திட்டம் மாணவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அரசுப் பள்ளி மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.

Exams Daily Mobile App Download

மேலும் வேலை தேடுவோருக்கு பதிலாக வேலைகளை உருவாக்குவோராக மாணவர்களை ஊக்குவிக்க இத்திட்டம் உதவும். மேலும் வருங்காலத்தில் கல்வி, தொழில், வேலை என எதுவாக இருந்தாலும் சரி, அது 80 சதவீதம் கணிதம், அறிவியலை சார்ந்து தான் இருக்கப்போகிறது. இனி ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களை ஸ்டெம் திட்டத்தில் இணைப்பது தான் எங்களது இலக்கு என்றும் கூறினார். இத்திட்டத்தின் தொடக்கமாக முதலாவது பேட்ச்சில், கிராமப்புறங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் இருப்பிட கோடைகாலப் பயிற்சிக்காக (residential summer program) ஐஐடி மெட்ராஸ்-க்கு அழைத்து வரப்பட்டனர்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

இந்த திட்டத்தில் அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக ஐஐடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சித் திட்டத்தை, எதிர்காலத்தில் ஆன்லைன் முறையில், இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய ஐஐடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 2022-23-ஆம் கல்வியாண்டில் STEM வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!