தமிழகத்தில் நாளை (ஜூலை 15) கல்வி அதிகாரிகள் கூட்டம் – முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 15) கல்வி அதிகாரிகள் கூட்டம் - முக்கிய தகவல்!
தமிழகத்தில் நாளை (ஜூலை 15) கல்வி அதிகாரிகள் கூட்டம் - முக்கிய தகவல்!
தமிழகத்தில் நாளை (ஜூலை 15) கல்வி அதிகாரிகள் கூட்டம் – முக்கிய தகவல்!

தமிழகத்தில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் என்னென்ன விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்வி அதிகாரிகள் கூட்டம்:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக கடந்த 2 வருடங்களில் எந்த ஒரு கல்வி நிறுவனங்களும் சரியாக திறக்கப்படவில்லை. கொரோனா அச்சத்தால், அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் முறையில் நடந்தது. மேலும் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதால், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் தாமதமாக தொடங்கியது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்தது. இந்த உறுதியில் பேரில், திட்டமிட்டபடி ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்தது. மேலும் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகளில் 2022- 2023 ம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. அதாவது தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் கூட்டம், மாதந்தோறும் நடத்தப்படும். கடந்த மூன்று மாதங்களாக, பொது தேர்வு மற்றும் அதற்கான பணிகள் இருந்ததால், இந்த கூட்டம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022- 2023 ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

நாடு முழுவதும் அமலாகும் WFH முறை – அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அரசு முடிவு!

இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், கமிஷனர் நந்தகுமார் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் கடந்த, 2021- 22ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு அதிகரித்தது. ஆனால், புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here