11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!

1
11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!
11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!
11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன. நோய்த்தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை சோதித்து உறுதிப்படுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து மாவட்டங்களையும் 4 மண்டலங்களாக, பிரித்து மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் நியமித்து உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு:

திருச்சி,அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களின் அதிகாரியும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருமான இல.நிர்மல் ராஜ் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் மகிழ்ச்சி!!

செய்தியாளர்களிடம் அவர், “நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பட்டு விதிகள் அனைத்தும் சரியாய் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 3 பள்ளிகளுக்கு 1 குழு வீதம் நியமிக்கப்ட்டுள்ளது. இவர்கள் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் காலம் முழுவதும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபடுவார்கள்.

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. வருகை பதிவேடும் கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதமுடன் தான் பள்ளிக்கு வர வேண்டும். 11ம் வகுப்பு மாணவர்களை பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

ஆட்சியர் விளக்கம்:

அதிகாரிகளின் ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தார். அவர் செய்தியாளர்களிடம், திருச்சி மாவட்டத்தில் 503 உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளுக்கு நோய்பரவல் தடுப்பு பராமரிப்புக்கு போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் நோய்பரவல் தடுப்பு விதிமுறைகளை சரியாய் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. No need school for 11th std its not much important
    11th std students life is must
    Then only they can participate and score in 12th std

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!