தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான பிரத்யேக இயக்கம் – கல்வித்துறை அமைச்சர் தொடக்கம்!

0
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான பிரத்யேக இயக்கம் - கல்வித்துறை அமைச்சர் தொடக்கம்!
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான பிரத்யேக இயக்கம் - கல்வித்துறை அமைச்சர் தொடக்கம்!தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான பிரத்யேக இயக்கம் - கல்வித்துறை அமைச்சர் தொடக்கம்!
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான பிரத்யேக இயக்கம் – கல்வித்துறை அமைச்சர் தொடக்கம்!

தமிழகத்தில் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புத்தகம் வாசிப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில் புத்தகம் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் படி பள்ளிகளில் செயல்பட்டு வரும் நூலகங்களை மாணவர்கள் பாடவேளைகளைளில் பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 6-8, 9-10, 11-12 என மூன்று பிரிவுகளாக மாணவர்களை பிரிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் வாரம் ஒரு புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகத்தை மாணவர்கள் தங்களின் வீட்டிற்கும் எடுத்து செல்லலாம். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன் அடுத்த புத்தகத்தை பெற்று கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்து முடித்த புத்தகத்தை பற்றிய புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல், குறு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் உள்ளிட்ட படைப்புகளை மாணவர்கள் செய்ய வேண்டும்.

இனி ரயில்களில் குழந்தைகளுக்கான டிக்கெட் விநியோகத்தில் மாற்றம்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்!

மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாவது, மேற்கண்ட படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வட்டார அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளபடுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் அறிவுப் பயணம் என்ற வெளிநாட்டுச் சுற்றுலா பயணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த பயணத்தின் போது மாணவர்கள் உலக புகழ்பெற்ற நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!