12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார் !! மாநில கல்வியமைச்சர் வழங்கினார்.!!!

0
12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார்
12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார்

12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார் !! மாநில கல்வியமைச்சர் வழங்கினார்.!!!

12ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து தற்போது அவ்வாறு முதலிடம் பிடித்த இரண்டு மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ பரிசளித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதியன்று 12 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் பிளஸ் 2 தேர்வில் 457 மதிப்பெண்களுடன் அமித் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்களுடன் மனிஷ் குமார் கடியார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இதனையடுத்து, ராஞ்சியில் உள்ள மாநில சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கார்களின் சாவியை மாணவர்கள் அமித் மற்றும் மனீஷிடம் ஒப்படைத்தார். இதுமட்டுமல்லாமல் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. 75% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 340 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிறப்பான குழந்தைகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஜே.ஏ.சி, சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ (இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்) வாரியங்களின் 10-ஆம் வகுப்பு மற்றும் 12 போர்டு தேர்வு முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ .1 லட்சம் பரிசு வழங்கும் திட்டத்திற்கு ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!