தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

1
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. இணைய வழி மற்றும் வாட்ஸ் அப் மூலம் வகுப்புகள் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவும் காரணத்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா – 2,726 பேர் உயிரிழப்பு!!

இந்த நிலையில் 2021ம் ஆண்டின் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் அனைத்து பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், சென்னை அசோக் நகரில் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தளர்வுகள் இல்லாத மாவட்டங்களில் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறவில்லை.

TN Job “FB  Group” Join Now

மற்ற மாவட்டங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் யோசிக்கவில்லை. மாணவர்களுக்கு இணையம் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I read your news this very usefull and my YouTube this news read update pannalama tour opinion please give positive answer on mail thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!