அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக அரசு சார்பில் மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை:

தமிழக அரசு மாணவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!

தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் போன்ற பிரிவை சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறப்படுகிறது. இதற்கு பெறப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முகவரி:

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம்,
2 வது தளம், சேப்பாக்கம்,
சென்னை – 5.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!