பாதியில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர கல்விக்கடன் – குறைந்த வட்டி விகிதம் எங்கே?

0
பாதியில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர கல்விக்கடன் - குறைந்த வட்டி விகிதம் எங்கே?
பாதியில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர கல்விக்கடன் - குறைந்த வட்டி விகிதம் எங்கே?
பாதியில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர கல்விக்கடன் – குறைந்த வட்டி விகிதம் எங்கே?

தங்களது உயர்கல்வியை பாதியில் விட்ட மாணவர்கள் மீண்டும் தங்கள் படிப்பை தொடர்வதற்காக வங்கிகள் கல்வி கடன்களை அளித்து வரும் நிலையில், குறைவான வட்டி விகிதம் அளிக்கும் வங்கிகளை பற்றிய விவரங்களை காண்போம்.

கல்விக்கடன்:

உயர்கல்வி மாணவர்கள் பொருளாதார காரணங்களினால் தங்கள் கல்வி வாய்ப்பை தவர் விடக் கூடாது என்று பல வங்கிகளும் மாணவர்களுக்கு கல்வி கடன்களை அளித்து வருகிறது. அரசு இதற்கான வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்து வேலைவாய்ப்பை பெற்ற பிறகு கல்விக்கடனை திருப்பி அளிக்க வேண்டும்.

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

பல வங்கிகளும் மாணவர்களுக்கான கல்விக்கடன்களின் வட்டி விகிதத்தை குறைந்துள்ள நிலையில் அவற்றை பற்றிய முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி, அனைத்து வங்கிகளிலும் கடன் வட்டி 6.75 சதவிகிதம் முதல் 7.15 சதவிகிதம் வரை உள்ளது.

6.75 % வட்டி விகிதம்:

பாங்க் ஆஃப் பரோடா மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கி முதல் இடத்தில் உள்ளது. 20 லட்ச ரூபாய் கல்விக்கடனுக்கு 7 ஆண்டுகளில் குறைந்த வட்டி விகிதமாக 6.75 சதவிகிதம் மட்டுமே நிர்ணயித்துள்ளது. மாத தவணை தோராயமாக ரூ. 29,942 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – தயார் நிலையில் மாணவர்கள்!

6.8% வட்டி விகிதம்:

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி அடுத்தபடியாக 6.8 சதவிகிதம் என்ற குறைந்த அளவிலான கல்விக்கடன் வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. இதற்காக மாத தவணை மாதத் தவணை ரூ. 29,999 என்று உள்ளது.

6.85 % வட்டி விகிதம்:

நாட்டின் மற்ற பெரிய வங்கிகளான BOB மற்றும் யூனியன் வங்கியின் வட்டி விகிதத்தை விட பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளும் சற்று அதிக அளவு வட்டி நிர்ணயித்துள்ளது. கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் 6.85% என்ற அளவில் உள்ளது. மாத தவணையாக ரூ.30,039 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6.9% வட்டி விகிதம்:

பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகள் 6.9% என்ற விகிதத்தில் கல்விக்கடனை வசூலித்து வருகிறது.

7.05% வட்டி விகிதம்:

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 7.05 சதவிகிதம் வட்டி விகிதம் என்ற நிர்ணயிப்பிற்கு மாத தவணையாக ரூ. 30,234 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

7.15% வட்டி விகிதம்:

மாநில வங்கியான இந்தியன் வங்கி ரூ.20 லட்சம் கடன் தொகையை 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் விதமாக்கல் வட்டி விகிதத்தை 7.15% ஆக நிர்ணயித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!