தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 13 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் முதல் 5 நாட்களுக்கு மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நல்லொழுக்க வகுப்புகள்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் வகுப்புகளை பயின்று வந்தனர். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல வகுப்புகளுக்கு வந்தனர். மேலும் திட்டமிட்டபடி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு!

மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் 5 நாட்கள் பாடத்திட்டங்களில் இருந்து வகுப்புகள் எடுக்காமல் நல்லொழுக்க வகுப்புகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு, மாநில மாநாடு நேற்று நடைபெற்றது,

Exams Daily Mobile App Download

அதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ஜூன் 13 ஆம் தேதி முதல் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் திறந்து முதல் 5 நாட்களுக்கு மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதன் பின் வழக்கம் போல மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் இருந்து வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆண்டு 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் துணைத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here