எச்சரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்.. அன்னிய செலாவணி இருப்பு குறைவு – திவாலாக போகும் பாகிஸ்தான்!!
உலகில் பல நாடுகள் கொரோனா பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பல நாடுகள் நிதி நெருக்கடியில் மீண்டும் சிக்கியது. இந்த நிலையில் பாகிஸ்தான் இன்னும் 3 வாரங்களில் திவாலாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி
கொரோனா பரவல் காரணமாக பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பொருளாதாரத்தில் மீண்டு வந்த சூழலில் உக்ரைன் -ரஷ்யா போர் ஏற்பட்டது. இதன் காரணமாக, மீண்டும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. இந்த நாட்டில் பல இடங்களில் பொதுமக்கள் கோதுமைக்காக அடித்துக்கொள்ளுவது உள்ளிட்ட மோசமான நிலை ஏற்பட்டது.
தமிழக ஆவின் ஊழியர்களுக்கு ரூ. 2.70 கோடி பொங்கல் போனஸ் – அமைச்சர் தகவல்!!
மேலும் உணவு பொருட்களின் விலையானது இதுவரை இல்லாத அளவுக்கு தாறுமாறாக உயர்ந்தது. தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு அலுவலகங்களை விற்பதன் மூலமாக நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள தனது தூதரகத்தையும் பாகிஸ்தான் அரசு விற்க முடிவுசெய்துள்ளது.
இது மட்டுமல்லாமல், நாட்டில் அதிகமாக கழுதைகள் இருப்பதால் அதனை சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் சர்வதேச நிதியத்திடமும் 650 கோடி டாலரை கடனாக பெற கோரிக்கை வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து வருவதால் இன்னும் 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலை வரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.