வணிக செய்திகள் – டிசம்பர் 2018

0

வணிக செய்திகள் – டிசம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

இங்கு நவம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

டிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இந்தியாவின் பொருளாதாரம் 7.1 சதவீதமாக வளர்ந்துள்ளது

 • 2018-19ல் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம்1 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய எளிய ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அறிமுகம்

 • புதிய எளிமையான ஜி.எஸ்.டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 • புது தில்லி வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டி.ஆர்.ஐ) அடிக்கல் தின விழாவில், வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எல்.பி.ஜி மானியம் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை

 • எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது.
 • தற்போது, ​பாஹல் ​பாலிசி திட்டத்தின் கீழ் எல்பிஜி நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்துகிறது.

OPEC& அதன் கூட்டாளிகள் எண்ணெய் வெளியீட்டை குறைக்க ஒப்புதல்

 • உலக எண்ணெய் சந்தையை உயர்த்துவதற்காக ஒரு நாளைக்கு 12 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (OPEC) [14 நாடுகளின் குழு] மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒப்புக் கொண்டது.

சைபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வங்கிக்குரூ.1 கோடி அபராதம் விதிப்பு

 • சைபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்திய வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்தது.

 என்.எஸ்..க்கு எதிராக செபி நீதிமன்றத்தில் வழக்கு

 • என்.எஸ்.இ.க்கு மற்றும் 30 பரிமாற்ற நிறுவனங்களுக்கு எதிராக, இந்தியாவின் பங்கு பத்திர பரிமாற்றம் வாரியம்[SEBI] நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

உலகளாவியக் கடன் 184 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு

 • சர்வதேச நாணய நிதியம், உலகளாவிய கடன் 184 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என அறிவிப்பு. இதில் பாதிக்கும் அதிகமாக அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் கடன் தொகை ஆகும் எனக்கூறினர்.
 • சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 225 சதவிகிதத்திற்கு இது சமமானதாகும்.

இன்டர்போல் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ்வெளியிட்டது

 • மாநில அரசு நடத்தும் பஞ்சாப் நேஷனல் வங்கியை 13,000 கோடி ரூபாய்க்கு ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமறைவான மெஹுல் சோகிசிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸை (RCN) இன்டர்போல் வெளியிட்டது.

சீனப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி அடைவதால் சர்வதேசஎண்ணெய் விலை சரிவு

 • சீனப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி அடைவதால் சர்வதேச எண்ணெய் விலை சரிவு, இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாட்டின் எரிபொருள் தேவை குறைவதை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகிறது

 • 2018-19 மற்றும் 2019-20ல் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதாரமாக கருதப்படுகிறது. உலக அளவில் உலக வளர்ச்சி குறிகாட்டிகளின் தரவுத்தளத்தின் படி இந்திய பொருளாதாரத்தின் பங்களிப்பு 2014 ல்6 சதவீதத்திலிருந்து 2017 ல்2 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்.

ஸ்டார்ட் அப்கள் எதிர்நோக்கும் வரிப் பிரச்சினைகளைக் கண்காணிக்க குழு அமைப்பு

 • ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஏஞ்ஜல் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து வரி விவகாரங்களையும் ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தியாகொரியா இடையே இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கதிட்டம்

 • கொரிய தீபகற்பத்தில் சமாதான மற்றும் ஸ்திரத்தன்மையின் ஒரு புதிய சகாப்தத்தில் இந்தியா தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது. இருதரப்பு வர்த்தகத்தின் அளவு 2030 ஆம் ஆண்டளவில் 50 பில்லியன் டாலர்களுக்கு உயர்த்த ஒப்புக்கொண்டது.

பொருட்களின் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாககுறைக்கப்பட்டது

 • 6 பொருட்களின் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு. டிவி, டயர், பவர் பாங்க் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.
 • சிமெண்ட், கார் பாகங்கள், ஏசி மற்றும் டிஷ்வாஷர் போன்ற 28 ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு குறிப்புகள் மூலம் முதலீடு அதிகரிக்கிறது

 • இந்திய மூலதன சந்தையில் பங்களிப்பு குறிப்புகள் மூலம் ரூ. 79,247 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையின் பகுதியாக இருக்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பதிவு செய்யாமல் பங்களிப்பு குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

6 நகரங்களில் சில்லரை பணப்பரிமாற்றத்தை கைப்பற்றிய ஆர்.பி..

 • இந்திய ரிசர்வ் வங்கி பெரு நகரங்களில் உள்ள ஆறு நகரங்களில் தனிநபர்களின் பணம் செலுத்தும் பழக்கங்களைக் கண்காணிக்கும். இந்த நோக்கத்திற்காக, மத்திய வங்கி ‘தனிநபர்களின் சில்லறை செலுத்தும் பழக்கவழக்கங்களில் (SRPHi)’ (‘Survey on Retail Payment Habits of Individuals (SRPHi)’). ஒரு சர்வேவை அமல்படுத்தியுள்ளது .
 • மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட ஆறு நகரங்களில் பல்வேறு சமூக பொருளாதார பின்னணியில் இருந்து 6,000 நபர்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்படும்.

மின்வணிகத்தில் நேரடி முதலீட்டிற்கான அரசு வழிகாட்டுதல்கள்

 • மின்வணிகத்தில் நேரடி முதலீட்டிற்கான அரசு வழிகாட்டுதல்கள் உள்நாட்டு பயணாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மின்வணிக நிறுவனங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான வழிகாட்டுதல்களை அரசு மறுபரிசீலனை செய்துள்ளது.

2019ற்கான கொப்பரைத் தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையைகுவிண்டாலுக்கு ரூ.2,000 அதிகரிப்பு

 • 2019 பருவத்திற்கான அரவை கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 9,521-ஆகவும், முழு கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 9,920-ஆகவும் உயர்த்துவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பூட்டானுக்கு ரூ .4,500 கோடி உதவித்தொகை இந்தியா அறிவிப்பு

 • பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் பிரதமர் டாக்டர்.லோதே ட்செரிங் உடன் பரந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியபின் 12 வது ஐந்தாண்டு திட்டத்திற்காக பூட்டானுக்கு 4,500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். பூடானின் புதிய ஐந்து வருட திட்டம் இந்த ஆண்டு துவங்கி 2022 வரை தொடரும்.

வர்த்தகர்கள் புதிய மின்வணிக விதிகளை வரவேற்கிறார்கள்

 • மின் வணிக நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை இறுக்கியது அரசாங்கம், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) இந்த முடிவை வரவேற்றது மற்றும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த விதிகள் பின்பற்றப்படும், இது வால்மார்ட்-இன் பிளிப்கார்ட் கையகப்படுத்தலை ரத்து செய்யும்.

2019ற்கான கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 அதிகரிப்பு

 • அரவை கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை [எம்.எஸ்.பி.] குவிண்டாலுக்கு 7750 ரூபாயிலிருந்து 9920 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எம்.எஸ்.எம்.. துறைக்கு ரூபாய் 37,400 கோடி மதிப்புள்ள கடன் வழங்க PSBகள் ஒப்புதல் அளித்துள்ளது

 • நவம்பர் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ’59 நிமிட கடன் திட்டத்தின் கீழ், 37,412 கோடி ரூபாய் மதிப்புள்ள MSME களுக்கு12 லட்சம் கடன் விண்ணப்பங்களை பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன.
 • ஜிஎஸ்டி-பதிவுசெய்யப்பட்ட மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ‘psbloansin59minutes.com’ portal மூலம் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் பெறலாம்.

மத்திய அரசு வெங்காய விவசாயிகளுக்கு ஏற்றுமதி ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது

 • மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கத்தொகையை தற்போதுள்ள 5 சதவீதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் குழுவிற்கான கடன் மானியம் மார்ச் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

 • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் [PMAY] கடன் மானியம் நடுத்தர வருமானம் பெறும் குழுமத்திற்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புறத்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

23 பொருட்கள் மற்றும் சேவைகளில் GST குறைக்கப்பட்டது

 • ஜி.எஸ்.டி. கவுன்சில், 23 பொருட்களில் அதாவது சினிமா டிக்கெட்டுகள் , டிவி மற்றும் மானிட்டர் திரைகள் மற்றும் பவர் பேங்க்களுக்கும் போன்றவைகளுக்கு வரியை குறைத்துள்ளது.
 • இதனால் ,தற்போது 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி அடைப்புக்குறிக்குள் உள்ளது. 32 அங்குலம் உள்ள மானிட்டர்கள் மற்றும் டிவி திரைகள் மற்றும் பவர் பேங்க்குகள்  28 சதவிகிதம் ஜி.எஸ்டியிலிருந்து தற்போது 18 சதவீதமான வரியைப் பெரும்.

7.1 வங்கி செய்திகள்

ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு தலைவர்

 • இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜாலனை நிபுணர் குழுவின் தலைவராக நியமித்துள்ளது. இது மத்திய வங்கியால் பராமரிக்கப்பட வேண்டிய இருப்புக்களின் அளவுகளை நிர்ணயிக்கும். ராகேஷ் மோகன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளில் PSU வங்கிகள் ரூபாய் 2.33 லட்சம் மதிப்புள்ளமோசமான கடன்களை மீட்டுள்ளது

 • 2014-15 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 33 லட்சம் கோடி ரூபாய் மோசமான கடன்களை திரும்பப் பெற்றுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பார்வைக் குறைபாடுடையவர்கள் ரூபாய் நோட்டுக்களைஅடையாளம் காண உதவ கைபேசி சார்ந்த தீர்வு

 • இந்திய ரிசர்வ் வங்கி, கைபேசி அடிப்படையிலான தீர்வை உபயோகித்து பார்வைக் குறைபாடுடையவர்கள் ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காண உதவுகிறது. தற்போது, இன்டேக்லியோ​​[intaglio] அச்சிடும் அடிப்படையிலான அடையாளங்கள் 100 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய் நோட்டுகளில் பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு உதவ காணப்படுகின்றன.

எம்எஸ்எம்இக்காக கடன் தரும் மிதப்பு விகிதத்திற்கு புதிய முறையைரிசர்வ் வங்கி முன்மொழிகிறது

 • அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியில், தனிப்பட்ட வீடு, கார் மற்றும் எம்எஸ்எம்இ-க்கள் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் ரெப்போ விகிதம் அல்லது கருவூல விளைச்சல் போன்ற வெளிப்புற வரையறைகளை இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
 • இந்த புதிய முறை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல்பட வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஐந்தாவது இரு மாத நாணயக் கொள்கை ஆய்வு அறிக்கை

 • இந்திய ரிசர்வ் வங்கி 2018-19 ஆம் ஆண்டிற்கான ஐந்தாவது இரு மாத நாணயக் கொள்கை ஆய்வு அறிக்கையை அறிவிக்கும். ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான நாணய கொள்கைக் குழு (எம்.பி.சி) மூன்று நாள் கொள்கை மறு ஆய்வு கூட்டம் மும்பையில் தொடங்கியது.

எக்ஸிம் வங்கி டான்சானியாவிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கடன் வழங்க ஒப்புதல்

 • இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) டான்ஸானியாவில் நீர் வழங்கல் திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதிகளை வழங்கியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ. 83,000 கோடி அரசு முதலீடு

 • நடப்பு நிதியாண்டில் அடுத்த சில மாதங்களில் அரசு பொதுத்துறை வங்கிகளில் 83 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அரசு திட்டம்.

கட்டாய பணவைப்பு விகிதம் என்ற ஸ்டேச்சுடரி லிக்விடிட்டி விகிதம்0.25 சதவிகிதம் குறைப்பு

 • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஒவ்வொரு காலாண்டிலும்25 சதவிகிதம் கட்டாய பணவைப்பு விகிதம் என்ற ஸ்டேச்சுடரி லிக்விடிட்டி விகிதத்தை குறைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 • கட்டாய பணவைப்பு விகிதம் என்ற ஸ்டேச்சுடரி லிக்விடிட்டி விகிதம் – எஸ்.எல்.ஆர் – வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன்பாக, ரொக்கம், தங்க இருப்பு, அரசாங்க ஒப்புதல் பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய நிதிகளின் பகுதியாக உள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!