ரூ.25,000 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
ரூ.25,000 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ரூ.25,000 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ரூ.25,000 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு Scientific Assistant-A மற்றும் Technical Officer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Scientific Assistant-A பணிக்கு 07 பணியிடம் மற்றும் Technical Officer பணிக்கு 01 பணியிடம் என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • Scientific Assistant-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Electronics Engineering / Electronics & Communication Engineering / Electrical & Electronics / Electrical / Instrumentation Engineering / Electronics & Instrumentation / Computer Science Engineering பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது Mathematics / Physics / Chemistry / Electronics பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Technical Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Electronics & TeleCommunication / Information Technology பாடப்பிரிவில் Engineering டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு போதிய அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • Scientific Assistant-A பணிக்கு 31.05.2022 அன்றைய தினத்தின் படி, 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Technical Officer பணிக்கு அன்றைய தினத்தின் படி, 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இதில் OBC க்கு 3 ஆண்டுகள், SCக்கு 5 ஆண்டுகள், PwD க்கு 10 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து, Scientific Assistant-A பணிக்கு ரூ.21,956/- மற்றும் Technical Officer பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Technical Officer பணிக்கு Document Verification மற்றும் Personal Interview மூலம் தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
  • Scientific Assistant-A பணிக்கு Document Verification, Written Test மற்றும் Trade Test ஆகியவற்றின் மூலம் தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
ECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணையத்தள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 17.06.2022 அன்று காலை 10 மணி அளவில் நேரில் கொண்டு சென்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே இந்த கடைசி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நாளை தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

ECIL Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here