சென்னை விமான பயணிகள் கவனத்திற்கு – சேவைகள் பாதிப்பு! கனமழை எதிரொலி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மணி நேரம் இடைவிடாது பலத்த கனமழை காரணமாக பல்வேறு விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
விமான சேவை
தமிழகத்தில் கோடைகாலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னையில் பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அத்துடன் 5 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
TN Job “FB
Group” Join Now
அதனால் பல்வேறு போக்குவரத்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி சென்னையில் 31 வகையான விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி ஜெர்மனி, தோகா, துபாய், மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் கனமழை காரணமாக ஐதராபாத், பெங்களூரில் தரை இறங்கின. இதனை தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து, டெல்லி, ஐதராபாத்தில் இருந்து வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நடுவானில் சுற்றி திரிந்தன. இதையடுத்து மழையின் அளவு குறைந்த பிறகு ஒவ்வொரு விமானங்களும் தரை இறங்கின.
TCS நிறுவனத்தில் கலை & அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இதையடுத்து சென்னையில் 15 விமானங்கள் பலத்த கனமழை காரணமாக தாமதமாக புறப்பட்டன. அதன்படி சென்னையில் சிங்கப்பூர், துபாய், பஹ்ரேன், டோஹா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருந்த சர்வதேச விமானங்களும் மற்றும் டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு செல்ல இருந்த உள்நாட்டு விமானங்களும் வானிலை மோசமாக இருந்ததால் வானிலை ஓரளவு சரியான பிறகு புறப்பட்டன. இந்த விமானங்கள் வழக்கத்தை விட 1 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டது.