தனியார் மூலம் நிரப்பப்படும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!!

1
மின்வாரியம் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு - மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
மின்வாரியம் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு - மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
தனியார் மூலம் நிரப்பப்படும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!!

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவன ஒப்பந்ததாரகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில், தற்போது தமிழக மின்வாரியம்  கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திலும், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

மின்வாரிய பணியாளர்கள் போராட்டம்:

தமிழக மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன்படி தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் 3 வருடம் வேலை செய்யலாம் எனவும் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஐஐடி படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியானது. ஏற்கனவே தமிழகத்தில் வெளிமாநில ஊழியர்கள் அரசு துறையில் வேலைசெய்யும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகிவுள்ளதால் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகள் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயம் ஆகிவிடும் என்ற அச்சத்தால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மத்திய கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ஏற்கனவே இதுகுறித்து மின்சார வாரியம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தபின்னர் அவர் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாத மின்வாரிய ஊழியர்கள் கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திலும், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தின் 3 வாயில்களும்  மின்வாரிய ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இன்று அனைவரும் விடுமுறை எடுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஏற்கனவே பணி நிரந்தரம் கோரி காத்திருக்கும் பல்வேறு மின்வாரிய ஊழியர்களுக்கு எதிராக இந்த திட்டம் இருப்பதாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கூறுகிறது.

இத்திட்டம் செயல்முறைக்கு வந்தால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும்.  வேலை நிரந்தரம் இல்லாமல் போய்விடும் என்பதாலும், மேலும் இத்திட்டத்தினால் லஞ்சம் பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர். எனவே இந்த திட்டத்தை திரும்பப்பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இந்த மாதிரி ஒப்பந்த துறையில் பணி இருந்தால் தெரிவிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!