தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் – ஆன்லைனில் பெற்றுக்கொள்ள எளிய முறை!!

0
தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் - ஆன்லைனில் பெற்றுக்கொள்ள எளிய முறை!!
தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் - ஆன்லைனில் பெற்றுக்கொள்ள எளிய முறை!!
தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் – ஆன்லைனில் பெற்றுக்கொள்ள எளிய முறை!!

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்று இ-பாஸ் நடைமுறை. தற்போது பிற மாநிலங்களிலிருந்தோ, வெளிநாடுகளிலிருந்தோ தமிழகம் வர விரும்புபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் கட்டாயம்:

தமிழகத்தில் கொரோனா பரவலலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த இந்த கட்டுப்பாடுகள் நாளை (10-04-2021) முதல் அமலுக்கு வரும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டுமாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிற மாநிலங்கள், வெளிநாடுகளிருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தவிர சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் இ-பாஸ் அவசியம். அதன்படி மாநில அரசு அறிவித்தபடி இ-பாஸை எளிதான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம் – பள்ளிக் கல்வித்துறை செயலர் வலியுறுத்தல்!!

இ-பாஸ் பெற்றுக்கொள்ள,

  • இ-பாஸ் பெற்றுக் கொள்ள முதலில் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • பிறகு உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.
  • அந்த ஓடிபி எண்ணை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
  • அங்கே உங்கள் பயணம் குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
  • அதில் தனியாக அல்லது குழுவாக செல்லுகிறீர்களா என்று கேட்கப்பட்டிருக்கும்.
  • பிறகு நீங்கள் பயணப்படும் வாகனம் பற்றி கேட்கப்பட்டிருக்கும்.
  • அதில் சரியானவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் நீங்கள் எந்த தெரிவை கிளிக் செய்கிறீர்களோ அதன் மற்றொரு பக்கம் திறக்கப்படும்.
  • அந்த பக்கத்தில் நீங்கள் எந்த வழியாக தமிழகத்திற்கு வருகிறீர்கள் என கேட்கப்பட்டிருக்கும்.
  • அதில் சாலை வழி என்பதை தேர்வு செய்தால் எதற்காக வருகிறீர்கள் என கேட்கப்படும்.
  • திருமணம், இறப்பு, சுற்றுலா என பல காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் தேவையானவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு விண்ணப்பதாரர், அவருடன் எத்தனை பேர் பயணப்படுகிறீர்கள் என்ற விவரம் கேட்கப்படும்.
  • அதில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களின் பெயர், வயது, பாலினம், மொபைல் எண், அடையாள அட்டை குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
  • அந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்து பதிவிடுவது கட்டாயம்.
  • கடைசியாக நீங்கள் பயணப்படும் வாகனம், அதன் எண் ஆகியவை குறித்து கேட்கப்படும்.
  • தேவையென்றால் அதையும் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட வழிகளை பயன்படுத்தி எளிதாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!