தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இனிமேல் பெறுவது ஈஸி – வெளியான சூப்பர் தகவல்!

0
தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இனிமேல் பெறுவது ஈஸி - வெளியான சூப்பர் தகவல்!
தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இனிமேல் பெறுவது ஈஸி - வெளியான சூப்பர் தகவல்!
தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இனிமேல் பெறுவது ஈஸி – வெளியான சூப்பர் தகவல்!

தமிழகத்தில் மின்னணு அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இதன் முடிவில் இவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டங்கள்

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசு பல வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் இந்த நலத்திட்டங்களை விரைவில் செயல்படுத்திடவும் தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு கிடைத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதமில்லா மின்னணு அலுவலகம் (e-office) நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் சிக்கல்கள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். இதன் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசின் திட்டங்களுக்கு தகுதியானவர்களின் தரவுகள் உடனடியாக பெற்றிடவும் நலத்திட்டங்கள் அனைத்து மக்களை சென்றடையும் வகையிலும் இ-அலுவலக மையங்கள் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

RRB தேர்வுகளில் முறைகேடுகள் இல்லை – ரயில்வே வாரியம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

மேலும், இ-அலுவலங்கள் மூலமாக வழங்கி வந்த அரசின் சேவைகள் 200 ல் இருந்து இப்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அரசின் அலுவலகங்கள் மின்னணு அலுவலகங்களாக விரைவில் மாற்றம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இ-அலுவலக திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனால் அரசு அலுவலகத்தில் காகித பயன்பாடு குறைக்கப்பட்டு பணிகளும் விரைவில் முடிவடையும். அதன்படி விரைவில் அனைத்து மாவட்டங்களில் அரசு துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!