ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா?? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸியான டிப்ஸ்!!

0
ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா?? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸியான டிப்ஸ்!!
ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா?? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸியான டிப்ஸ்!!

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா?? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸியான டிப்ஸ்!!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை தற்போது தேவைப்படுகிறது. இப்போது உங்களின் ஆதாரில் முகவரியை எப்படி எளிய வழிமுறைகள் மூலமாக மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆதார்:

இந்தியாவில் ஆதார் அட்டை தனி நபரின் அடையாள அட்டையாகவும், அனைத்து ஆவணங்களை விட முக்கியமான ஒரு ஆவணமாகவும் விளங்குகிறது. அத்துடன் அரசின் சேவைகளை பெற ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தற்போது வங்கி கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும்.

ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இவை அனைத்தும் மற்ற அரசின் ஆவணங்களில் இருக்கும் விவரங்களை ஒத்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில் இதனை UIDAI அனுமதி அளிக்கிறது. நீங்கள் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இருப்பவராகவோ இருந்தால் அடிக்கடி உங்களின் முகவரியை மாற்ற வேண்டியிருக்கும். இதற்கும் UIDAI வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.10க்கு 24 மளிகை பொருள்கள் – அரசு நடவடிக்கை!

Exams Daily Mobile App Download

1. இதற்கு முதலில் https://www.uidai.gov.in/. என்ற UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் ‘My Aadhaar’ என்பதை கிளிக் செய்து ‘Update Your Aadhaar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. அதில் ‘update demographics data online’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. அடுத்ததாக ‘Proceed to update Aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தற்போது ஆதார் எண், கேப்ட்சா குறியீடு உள்ளிட்டவைகளை பதிவிட வேண்டும்.

5. இதையடுத்து ‘Send OTP’ என்பதை கிளிக் செய்தவுடன் இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ‘OTP’ எண் அனுப்பப்படும்.

6. இப்போது ‘OTP’ எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்ததாக ‘Update Demographics Data’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

7. அடுத்து நீங்கள் இப்போது முகவரியில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதால் ‘address’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

8. இதில் உங்களின் புதிய முகவரியை உள்ளிட்டு, முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து ‘Proceed’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9. இறுதியாக நீங்கள் கொடுத்துள்ள முகவரியை சரிபார்த்து விட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும். இப்போது உங்களின் புதிய முகவரியானது அப்டேட் செய்யப்பட்டு விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!