ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ் - புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ் - புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற விரும்பினால் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று புகைப்படத்தை எளிதாக மாற்றலாம். இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

ஆதார் அட்டை:

இந்திய குடிமகன்களுக்கு யுஐடிஏஐ அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் எண் தான் ஆதார் அட்டை ஆகும். இன்றைய நாளில் இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு மாறிவிட்டது. இதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், புகைப்படம், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஜூன் 10 முதல் 21 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

ஆதார் கார்டை வைத்து வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானதாக கருதப்படுகிறது. அதாவது, நம் கையில் எப்போதும் உள்ள ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்ற விருப்பினால், இந்த பதிவு உங்களுக்கு தான்!

ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே சமயம், ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற விரும்பினால் வீட்டிலிருந்த படியே மாற்றுவதற்கான வசதியை UIDAI ஏற்படுத்தி இருக்கிறது.

1. ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற ரூ. 25 மட்டுமே செலுத்த வேண்டும்.

2. முதலில் https://uidai.gov.in என்ற UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

3. செல்வதன் மூலம், ஒரு படிவம் வரும் இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

Exams Daily Mobile App Download

4. பின்னர் படிவத்தை நிரப்பி தங்களுடைய பகுதியில் உள்ள ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

5. மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.

6. பின்பு, ஆதார் மையத்திற்கு சென்ற பிறகு புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும்.

7. அதன் பிறகு உங்களுக்கு ரசீது வழங்கப்படும். இந்த ரசீதை பதிவிறக்கம் செய்யவும்.

8. பின்னர், அடிப்படை புகைப்படம் மாறியுள்ளதா என்பதைச் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

9. பின்னர் புகைப்படத்தை மாற்றுவதற்கான ரூ.25 செலுத்த வேண்டும்.

10. அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!