முந்தைய இடைக்கால இந்தியா

0

முந்தைய இடைக்கால இந்தியா

          ஹர்ஷரது மறைவுக்குப்பின், சுமார் ஐந்து நூற்றாண்டுகள் வட இந்தியாவில் அரசியல் ஒற்றுமை ஏற்படவில்லை. நாடு பல்வேறு அரசுகளாக சிதறுண்டு கிடந்ததோடு, ஒருவருக்கொருவர் போரிட்ட வண்ணம் இருந்தனர். காஷ்மீர், காந்தாரம் சிந்து, குஜராத், கனோஜ், அஜ்மீர், மாளவம், வங்காளம், அஸ்ஸாம் ஆகியன வட இந்தியாவிலிருந்த முக்கிய அரசுகள். எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஷ்மீர் ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், வட இந்தியாவில் பிரதிஹாரர்களின் ஆதிக்கம் ஏற்படும்வரை வங்காளத்தில் பாலர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் பத்தாம் நூற்றாண்டில் தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள் வட இந்தியாவில் தங்களது மேலாதிக்கத்தை விரிவு படுத்த முயன்று தோல்வி கண்டனர்.

ராஜபுத்திர அரசுகள்:

  • ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்ற ரஜபுத்திரர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முஸ்லீம் படையெடுப்பு வரை வலிமையுடன் திகழ்ந்தனர். அதற்குப் பின்னரும், பல ரஜபுத்திர அரசுகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன.
  • முஸ்லிம், இந்து சமயத்தையும் பண்பாட்டையும் காத்து நின்றவர்கள் ரஜபுத்திரர்களேயாவர்.
  • ரஜபுத்திரர்களின் தோற்றம் குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. அந்நியப் படையெடுப்பாளர்கள் மற்றும் இந்திய ஷத்திரர்கள் ஆகியோரின் வழிவந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
  • அந்தியப் படையெடுப்பாளர்கள் இந்திய மயமாக்கப்பட்டு இந்திய சமுதாயத்தில் இரண்டறக் கலந்தனர். ரஜபுத்திரர்கள் பற்றிய பல பழங்கதைகள் இக்கருத்தை ஆதரிப்பதாக உள்ளன. ஆகவே, ரஜபுத்திர குலம் பல்வேறு கூறுகளின் கலப்பே என்று கூறலாம். கலப்பு மணங்களின் மூலமாகவும், பொதுவான பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்தா தோற்றம் குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன.
  • அந்நியப் படையெடுப்பாளர்கள் மற்றும் இந்திய ஷத்திரர்கள் ஆகியோரின் வழிவந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது. அந்தியப் படையெடுப்பாளர்கள் இந்திய மயமாக்கப்பட்டு இந்திய சமுதாயத்தில் இரண்டறக் கலந்தனர்.
  • ரஜபுத்திரர்கள் பற்றிய பல பழங்கதைகள் இக்கருத்தை ஆதரிப்பதாக உள்ளன. ஆகவே, ரஜபுத்திர குலம் பல்வேறு கூறுகளின் கலப்பே என்று கூறலாம்.
  • கலப்பு மணங்களின் மூலமாகவும், பொதுவான பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்ததாலும் அவர்கள் ஒரே குலமாக உருவெடுத்தனர்.
  • போர்த் தொழிலையும் அவர்கள் பின்பற்றத் தொடங்கினர். இருப்பினும், வணிகமும் வேளாண்மையும்கூட செழித்தன. நகரங்களில் நடைபெற்ற வணிகம் மற்றும் செல்வ வளம் பற்றி அராபியப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். பலம் வாய்ந்த கோட்டைகளையும் அவர்கள் கட்டிக் கொண்டனர்.
  • ரஜபுத்திர அரசுகளில் காலத்தால் முந்தையது கூர்ஜர பிரதிகார அரசாகும். ஹரிஸ் சந்திரன் அதன் முக்கிய தலைவர்.
  • ராஜபுதனத்தில் பரந்த நிலப் பகுதிகளைக் கைப்பற்றிய அவர் பின்மால் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.
  • கூர்ஜரர்களில் பல பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவு குஜராத்திலும், மற்றது அவந்தியிலும் ஆட்சி புரிந்தன. வங்காளத்தின் பாலர்களுடனும்.
  • தக்காணத்தின் ராஷ்டிரகூடர்களுடனும் அவர்கள் போரிட்டனர். ரஜபுத்திர இனத்திலேயே வீரமிக்கவர்களான சௌகன்கள் ஆஜ்மீரில் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைசிறந்த அரசன் விக்ரஹராஜன். அவர் டெல்லியை கைப்பற்றினார்.
  • எனவே, கோரிமுகமதுவின் கீழ் முஸ்லிம்கள் படையெடுத்து வந்தபோது சௌகன்கள் அவர்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இக்காலத்திய மற்றொரு முக்கிய ரஜபுத்திரப் பிரிவினர் பரமாரர்கள். அவர்களது சிறந்த அரசன் போஜன். அவரது போர்வெற்றிகளும் பண்பாட்டுப் பங்களிப்பும் ரஜபுத்திர வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளன.
  • தொடர்ந்த போர்களின் காரணமாக ரஜபுத்திரர்கள் வலிமையிழந்தனர். மேலும், அவர்கள் பொது எதிரிக்கு எதிராக ஒருபோதும் அணிவகுத்து நிற்கவில்லை.
  • அரசியல் தொலைநோக்கும் அவர்களிடம் காணவில்லை. உட்பகை மேலோங்கியிந்தமையால், அவர்கள் முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடத் தவறினர்.

சிந்துவை அராபியர் கைப்பற்றுதல் ( கி.பி. 712):

  • அரேபியாவிலுள்ள மெக்கா நகரில் பிறந்தது இஸ்லாம். நிறுவியவர் முகமது நபி. ஆனால், மெக்கா நகரைச் சேர்ந்த செல்வந்தர்கள் அவரது போதனைகளை எதிர்த்தனர்.
  • எனவே, அவர் கி.பி. 622 ஆம் ஆண்டு மெதினாவுக்குச் சென்றார். அந்த ஆண்டிலிருந்துதான் முஸ்;லிம் சகாப்தமான ஹிஜிரா தொடங்குகிறது.
  • முஸ்லிம் நாட்காட்டியம் தொடங்குகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முகமது நபி தனது சீடர்களுடடன் மெக்காவிற்குத் திரும்பினார். கி.பி. 631ல் அவர் மறைந்தார்.
  • முகமது நபியின் சீடர்கள் காலிப்புக்களின் பேரரசை ஏற்படுத்தினர். உமையதுகளும், அப்பாசிதுகளும் காலிப்புகள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் படையெடுப்புகள் மூலம் தங்களது ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்தி இஸ்லாமிய சமயத்தைப் பரப்பி வந்தனர்.
  • கி.பி. 712 ஆம் ஆண்டு உமையதுகள் அரசின் படைத்தலைவரான முகமது பின் காசிம் சிந்துப் பகுதியின்மீது படையெடுத்தார்.
  • சிந்து அரசின் ஆட்சியாளரான தாஹிர் என்பவருடன் கடும் போரிட்டு அவரை தோற்கடித்துக் கொன்றார். சிந்துவின் தலைநகரம் அரோர் கைப்பற்றப்பட்டது. மேலும் முன்னேறிய காசிம் முல்தானைக் கைப்பற்றினார்.
  • சுந்துவில் ஆட்சிமுறையை காசிம் சீரமைத்தார். சிந்துவில் வாழ்ந்த இந்துக்களுக்கு ‘சிம்மிக்கள்’ என்றழைக்கப்படும் பாதுகாக்கப்படும் மக்கள் என்ற இரண்டாந்தர அந்தஸ்து வழங்கப்பட்டது. இருப்பினும், அம்மக்களின் அன்றாட வாழ்க்iயில் எவ்வித தலையீடும் இல்லை. சொத்துககள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. பின்னர், காசிம் காலிப்பினால் திருப்பியிழைக்கப்பட்டார்.
  • இருப்பினும், சிந்து அராபியரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. மேற்கிந்தியாவில் வலிமையான பிலதிஹார அரசு ஆட்சி செய்து வந்தமையால், முஸ்லிம்களினால் இந்தியாவிற்குள் தங்களது ஆதிக்கத்தை விரிவு படுத்தமுடியவில்லை.
  • அராபியர் சிந்துiவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உடனடியாக முஸ்லிம் படையெடுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. எனினும் இந்தியப் பண்பாடு மேலை நாடுகளில் பரவுவதற்கு அது வழி வகுத்தது.
  • பல அராபியப் பயணிகள் சிந்துவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் மூலமாக இந்திய எண் முறை ஐரோப்பாவிற்கு சென்றது.
  • அராபியப்பேரரசின் ஒரு பகுதியாக சிந்து விளங்கியதால், இந்தியாவின் அறிவுத் தொகுதி வெளிநாடுகளுக்கு வேகமாகப் பரவியது.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

கஜினி முகமதுவின் படையெடுப்புகள்:

  • கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் அப்பாசீதுகளின் அரசு வீழ்ச்சியடைந்தது. துருக்கிய ஆட்சியாளர்கள் சுதந்திர அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். காலிப் பெயரளவுக்கே ஆதிக்கம் செலுத்தினார்.
  • அத்தகைய ஆட்சியாளர்களில் ஒருவர்தான் கஜினிதை; தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த அலப்டிஜின்.
  • அடுத்து ஆட்சிக்கு வந்த அவரது மருமகன்; சபுக்டிஜின் வடமேற்கு வழியாக,இந்தியாவைக் கைப்பற்ற விரும்பினார். ஜெயபாலரிட மிருந்து பெஸாவரை அவர் கைப்பற்றினார். ஆனால் அவரது படையெடுப்புகள் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்தவர் முகமது.

கஜினி முகமது (கி.பி. 997 -1030):

  • கஜினி முகமது இந்தியாவின்மீது பதினேழு முறை படையெடுத்து வந்தார் எனக் கூறப்படுகிறது. அக்காலத்தில் வட இந்தியாவில் பல இந்து அரசுகள் ஆட்சியிலிருந்தன. இந்தியாவின் எல்லைப்புறத்தில், பஞ்சாப் முதல் காபூல் வரையிலான பகுதியில் இந்து சாஹி அரசு இருந்தது. கனோஜ், குஜராத், காஷ்மீர், நேபாளம், மாளவம், பண்டேல்கண்ட் போன்றவை வடஇந்தியாவிலிருந்த முக்கிய அரசுகள். முகமதுவின் தொடக்கப் படையெடுப்பை இந்து சாஹி அரசர் ஜெயபாலர் எதிர்கொண்டார். 1001ல் ஜெயபாலர் முறியடிக்கப்பட்டார். தோல்வியடைந்த ஜெயபாலர் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
  • அடுத்து ஆட்சிக்கு வந்த அனந்தபாலர் முகமதுவை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், 1008 ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகிலிருந்த இந்து சாஹி அரசின் தலைநகரான வைஹிந்த் என்ற இடத்தில் நடைப்பெற்ற போரில் அவர் தோற்றுப் போனார்.
  • இப்போரில் அனந்தபாலருக்கு ஆதரவாக கனோஜ், ராஜஸ்தான் ஆட்சியாளர்கள் இருந்தனர். வைஹிந்த் வெற்றிக்குப் பிறகு முகமது பஞ்சாபின் பெரும் பகுதியை தமது ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார்.
  • அதற்குப்பின் முகமது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகள் யாவும் செல்வம் நிறைந்த நகரங்களையம் கோயில்களையும் தாக்கி கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.
  • 1018 ஆம் ஆண்டு முகமது மதுரா நகரைச் சூறையாடினார். கனோஜ் மீதும் தாக்குதல் தொடுத்தார். கனோஜை விட்டு ஓடிய அதன் அரசர் ராஜ்ய பாலர் விரைவில் இறந்தார்.
  • பெருத்த கொள்ளைப் பொருளுடன் கலிஞ்சார் வழியாக முகமது திரும்பிச் சென்றார். அவரது அடுத்த படையெடுப்பு குஜராத்திற்கு எதிரானதாகும்.
  • 1024 ஆம் ஆண்டு முல்தானிலிருந்து புறப்பட்ட முகமது ராஜபுதனத்தைக் கடந்து, சோலங்கி அரசர் முதலாம் பீமதேவனை முறியடித்தார்.
  • அன்ஹில்வாத் சூறையாடப்பட்டது. பின்னர், சோமநாதபுரத்தின் புகழ்மிக்க ஆலயம் தாக்கப்பட்டது. சிந்துப்பாலைவனம் வழியாக, முகமது நாடு திரும்பினார். இதுவே, அவரது கடைசிப் படையெடுப்பாகும். கி.பி. 1030 ஆம் ஆண்டு முகமது இறந்தார்.
  • கஜினி முகமது வெறும் கொள்ளைக்காரனாக இருக்கவில்லை. கிழக்கே பஞ்சாப் முதல் மேற்கே காஸ்பியன் கடல் வரையும், வடக்கே சாமர்கண்ட் முதல் மேற்கே காஸ்பியன் கடல் வரையும், வடக்கே சாமர்கண்ட் முதல் தெற்கே குஜராத் வரையும் பரவியிருநடத ஒரு பெரும் பேரரசை அவர் உருவாக்கியிருந்தார்.
  • கஜினிப்பேரரசு, பாரசீகம், டிரான்சாக்சியானா, ஆப்கானிஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தலைமைப்பண்பையும், ஓய்வில்லாத உழைப்பையும் கொண்டிருந்த காரணத்தால் அவரால் இத்தகைய சாதரனகளை செய்ய முடிந்தது.
  • முகமதுவை இஸ்லாமின் நாயகன் என்று இடைக்கால வரலாற்றாசிரியர்கள் போற்றியுள்ளனர். கலை, இலக்கியத்தையும் அவர் ஆதரித்தார். அவரது அவையை அலங்கரித்த அல்பெருனி புகழ்மிக்க கிதாப் – இ – ஹிந்த் என்ற இந்தியா பற்றிய நூலை எழுதினார்.
  • முகமது, முல்தானையும் பஞ்சாபையும் கைப்பற்றியதால் இந்தியாவின் அரசியல் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
  • துருக்கியர்களும், ஆப்கானியர்களும் இந்தியாமீது தொடர்ந்து படையெடுக்கவும், எந்த நேரத்திலும் கங்கைச் சமவெளிவரை செல்லும் வாய்ப்பையும் முகமதுவின் படையெடுக்கவும், எந்த நேரத்திலும் கங்கைச் சமவெளிவரை செல்லும் வாய்பபையும் முகமதுவின் படையெடுப்புகள் வழிவகுத்தன. மேலும், அவரது தொடர்ந்த படையெடுப்புகளினால், இந்தியாவின் எதிர்கால அரசியலுக்கு இது தீங்காக முடிந்தது.
  • அந்நியப்படையெடுப்பாளர்களுக்கு எதிராக இந்தியாவின் வாயிலில் அரணாக நின்றது இந்து சாஹி அரசாகும். முகமது அதனை அழித்தார். இந்திய எல்லைப்புறம் பாதுகாப்பற்றுவிடப்பட்டது.
  • கஜினிப் பேரரசில் பஞ்சாபுரம் ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றிருந்தால் அடுத்து வந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களின் பணி எளிதாயிற்று.

கோரி முகமது:

  • கஜினி அரசுக்கு கீழ்ப்படிந்திருந்த கோரிகள், கஜினி முகமதுவின் மறைவுக்குப் பிறகு சுதந்திரமடைந்தனர். கஜினிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், முகமது கோரி என்று அழைக்கப்பட்ட மொய்சுதீன் முகமது கஜினியை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார்.
  • கஜினியில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்ட முகமது கோரி இந்தியாவின்மீது தனது கவனத்தைச் செலுத்தினார்.
  • கஜினி முகமதுவைப்போல் அல்லாமல், கோரி இந்தியாவைக் கைப்பற்றி அங்கு பேரரசை விரிவுபடுத்த விரும்பினார்.
  • 1175 ஆம் ஆண்டு முகமது கோரி முல்தானைக் கைப்பற்றினார். அடுத்த படையெடுப்பின்போது சிந்துப் பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
  • 1186 ல் பஞ்சாபைத் தாக்கி குஸ்ருமாலிக் என்பவரிடமிருந்து பஞ்சாபைக் கைப்பற்றினார். பஞ்சாபை அவர் இணைத்துக் கொண்டதால் சட்லஜ் நதி வரையில் அவரது பேரரசு கிழக்கே விரிவடைந்தது. அடுத்து சௌகன்கள் மீது போர் தொடுப்பதற்கு இது வழிவகுத்தது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

தரெய்ன் போர் (1191 – 1192):

  • அச்சத்தை எதிர்கொண்டிருந்த வடஇந்தியாவின் இந்து அரசர்கள் பிருதிவிராஜ் சௌகன் தலைமையில் ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தினர்.
  • கி.பி. 1191 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகன் முகமது கோரியை முறியடித்தார். இத்தோல்வியினால், முகமது கோரி தமக்கு தலைகுனிவு ஏற்பட்டதாகக் கருதினார். எனவே, தகுந்த பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர் கொண்ட பெரும்படையைத் திரட்டினார்.
  • அப்படையுடன் முகமது கோரி பெஷாவர்,முல்தான் வழியாக லாகூரையடைந்தார். தமது மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும்படியும் இஸ்லாமிய சமயத்திற்கு மாறிவிடும்படியும் பிருதிவிராஜனுக்கு தூது அனுப்பினார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த பிருதிவிராஜ் சௌகன் மீண்டும் படையெடுப்பாளரை எதிர்கொள்ள முடிவு செய்தார்.
  • மூன்று லட்சம் குதிரைகள், மூன்றாயிரம் யானைகள், ஏராளமான காலாட்படை வீரர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினார். பல இந்து அரசர்களும், சிற்றரசர்களும் அவருடன் இணைந்தனர். 1192 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தரையன் போரில் முகமது கோரி பிருதிவிராஜனை இறுதியாக முறியடித்து, கைப்பற்றி கொன்றார்.
  • இரண்டாவது தரெய்ன் போர் ஒரு தெளிவான முடிவைக் கொடுத்த போராகும். ரஜபுத்திரர்களுக்கு அது மாபெரும் தோல்வியைக் கொடுத்தது. அவர்களது அரசியல் செல்வாக்கு சரிந்தது. சௌகன்களின் அரசு படையெடுப்பாளரின் காலடியில் கிடந்தது. இவ்வாறு இந்தியாவின் முதல் முஸ்லிம் அரசு ஆஜ்மீரில் நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. தரெய்ன் போரில் பெற்ற மாபெரும் வெற்றியைச் சுமந்து, முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
  • இந்தியாவில் வெற்றிகொண்ட பகுதிகளை படைத்தளபதி குத்புதீன் ஐபக்வசம் விட்டுச் சென்றார். டெல்லி, மீரட் போன்ற பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்ட ஐபக் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டார்.
  • 1193 ஆம் ஆண்டு கோரிp முகமதுவின் அடுத்த படையெடுப்புக் கான ஆயத்தங்களையும் செய்து கொடுத்தார். இப்படையெடுப்பு காதவாலா அரசின் ஆட்சியாளர் ஜெயச்சந்திரனுக்கு எதிரானதாகும். முகமது, ஜெயச் சந்திரனின் படைகளை தவிடுபொடியாக்கினார்.
  • சந்தாவர் போருக்குப் பிறகு முஸ்லீம்கள் கனோஜ் நாட்டைக் கைப்பற்றினர். தரெய்ன் போரும், சந்தாவர் போரும் இந்தியாவில் துருக்கியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழிவகுத்தன. 

இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்கள்:

  • இந்து அரசர்களின் தோல்விக்கான காரணங்களை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களுக்கிடையே ஒற்றமையில்லாததே தோல்விக்கு அடிப்படைக் காரணமாகும். புல அணிகளாக அவர்கள் பிரிந்து கடந்தனர்.
  • தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருந்த ரஜபுத்திரர்கள் வலிமையிழந்து காணப்பட்டனர். இரண்டாவதாக, பல இந்து அரசுகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன.
  • அவர்களது ராணுவ முறைகள் மிகவும் பழமையானவை. முஸ்லீம்களின் படைகளைவிட தரத்தில் குறைந்தவை. இந்தியர்கள் யானைகளையெ பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் முஸ்லிம்கள் விரைவாகச் செல்லக்கூடிய குதிரைப்படைகளைக் கொண்டிருந்தனர்.
  • முஸ்லிம் வீரர்கள் திறமையிலும் அமைப்பு ரீதியிலும் உயர்வாகவே காணப்பட்டனர். அவர்களுக்கிருந்த சமய உணர்வும், இந்தியச் செல்வத்தின்மீது கொண்டிருந்த ஆசையும் அவர்களுக்கு பெருத்த உற்சாகம் அளிப்பதாக இருந்தன.
  • இந்துக்களிடையே ஷத்திரியர்கள் என்ற ஒரு வகுப்பினர் மட்டுமே போரிடும் கடமையைப் பெற்றிருந்தனர். மேமலும், இந்துக்கள் எப்போதும் தற்காப்புக்காகவே போரிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது வலிமை குறைந்த நிலையின் வெளிப்பாடாகும்.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!