தமிழக அரசின் இ-முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளங்கள் – முதல்வர் தொடக்கி வைப்பு!

0
தமிழக அரசின் இ-முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளங்கள் - முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழக அரசின் இ-முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளங்கள் - முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழக அரசின் இ-முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளங்கள் – முதல்வர் தொடக்கி வைப்பு!

தமிழகத்தில் இன்று இ-முன்னேற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நண்பன் ஆகிய வலைதளங்களை முதமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

வலைதளங்கள் தொடக்கம்:

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஆட்சியை நல்ல முறையில் நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் ‘இ-முன்னேற்றம்’ மற்றும் தகவல் ‘தொழில்நுட்ப நண்பன்’ ஆகிய இரு வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளங்களை இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்துள்ளார். இந்த ‘இ-முன்னேற்றம்’ இணைய தளம் உயர்மட்டக் குழுவின் சுமார் ஒரு இலட்சம் கோடிக்கான 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘இ-முன்னேற்றம்’ வலைத்தளம் அரசு திட்டம் குறித்த விபரங்கள், பணி ஒப்பந்த நாள், தொடங்கப்பட்ட நாள், நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நிதி நிலைமையின் வரையறை போன்றவை இடம் பெற்றிருக்கிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு!

இதன் மூலம் அரசுத் திட்டங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்கள் பற்றி கருத்துகள் கேட்கும் விதமாக ‘தொழில்நுட்ப நண்பன்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ‘கணினி விசைப்பலகை’ மற்றும் ‘தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி’ ஆகிய இரு தமிழ் மென்பொருள்களும் புதிய வசதிகளுடன், ‘கீழடி- தமிழிணைய விசைப்பலகை’ மற்றும் ‘தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு இணையதளங்கள் தமிழ் இணைய கல்வி கழகத்தால் வடிவமைக்கப்பட்டது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை, அதிகரிக்கும் மெசேஜ் மோசடிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

‘கீழடி- தமிழிணைய விசைப்பலகை’ இணையதளம் தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை சரி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி’ வெவ்வேறு doc முறையில் சேமிக்கப்பட்டுள்ள ஆவணங்களை தமிழ் ஒருங்குறிக்கு மாற்றும் தன்மையுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைதளங்கள் மற்றும் இரு தமிழ் மென்பொருள்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!