சென்னை நகருக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் – முழு விவரங்கள் இதோ!

0
சென்னை நகருக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் - முழு விவரங்கள் இதோ!
சென்னை நகருக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் - முழு விவரங்கள் இதோ!
சென்னை நகருக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் – முழு விவரங்கள் இதோ!

ஜூன் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட பணியாளர்களுக்கு இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கான இ-பாஸ் குறித்த சந்தேகங்களையும், அதற்கான விளக்கங்களையும் இந்த பதிவில் காண்போம்.

இ – பாஸ் விளக்கங்கள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் முதலில் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க இ -பதிவு முறையும், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு மட்டுமே இ – பாஸ் முறையும் நடைமுறையில் இருந்தது. இந்த தளர்வுகளினால் அதிக அளவிலான மக்கள் வெளியில் சுற்ற ஆரம்பித்தனர். இதனால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவ தொடங்கியது.

ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் விளைவால் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இ – பாஸ் குறித்து பொதுமக்களுக்கு எழும் பொதுவான சந்தேகங்களை தீர்க்கும் விதமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை நகருக்குள் பயணிப்பதற்கு இ – பாஸ் பெறுவது தொடர்பான விளக்கங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு உள்ளே எங்கு பயணிக்க வேண்டும் என்றாலும் கட்டாயம் இ – பாஸ் பெற வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

வங்கி பணிகளுக்காக இ – பாஸ் பெற முடியாது. அரசு அறிவிப்பின் படி, 33% பணியாளர்களுடன் சில நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு கால வரையறை ஏதும் அறிவிக்கப்படவில்லை. முதியோர் பராமரிப்பு பணிகளுக்காக தனியாக இ-பாஸ் பெற முடியாது. கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்காக பணியாளர்கள் வர அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், பணியாளர்கள் பயணிக்கலாம். மேலும், அவசர மருத்துவ தேவை இ – பாஸ் பெற்று சென்னையின் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதியில் உள்ள பெற்றோர்களை சென்று கவனிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!