ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPFO) இ-நாமினேசன் தாக்கல் – ஆன்லைன் வழிமுறைகள்!

0
ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPFO) இ-நாமினேசன் தாக்கல் - ஆன்லைன் வழிமுறைகள்!
ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPFO) இ-நாமினேசன் தாக்கல் - ஆன்லைன் வழிமுறைகள்!
ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPFO) இ-நாமினேசன் தாக்கல் – ஆன்லைன் வழிமுறைகள்!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு வாரிசு தாக்கல் செய்வதற்கு அரசு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

வாரிசு தாக்கல்:

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதில் 8.33 சதவீதம் பென்சன் திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் ஊழியர்களின் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும். இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு வாரிசு (Nominee) டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில், உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க இன்று இ-நாமினேஷனை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக அதிகாரபூர்வ தளத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம் என்று தெரியப்படுத்தியிருக்கிறது.

ஆன்லைனில் இ-நாமினேஷனை தாக்கல் செய்யும் முறை:
  • முதலில், epfindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் ‘சேவை’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது ‘ஊழியர்கள்’ என்பதை கிளிக் செய்து, ‘Member UAN / Online Service (OCS / OTP)’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும்.
  • அதில், ‘ Manage Tab’ என்பதன் கீழ் உள்ள ‘E-nomination’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர், ‘Provide Details’ என்ற திரை தோன்றும் அதில், ‘Save’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதில், குடும்ப விவரங்களை தெரிவிக்க ‘Yes’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, ‘Add Family Details’ என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இணைக்க முடியும்.
  • அதில், ‘Nomination Details’ என்பதை தேர்வு செய்து, ‘Save’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வந்த உடன் அதனை ‘E-sign’ செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!