அனைத்து கடைகளிலும் ‘இது’ அவசியம், இல்லாவிட்டால் அபராதம் – மாநகராட்சி நிர்வாகம்!
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
குப்பைத்தொட்டி அவசியம்:
தமிழகத்தில் நகரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்டங்களில் தூய்மை பணியை மேற்கொள்ளும்படி அந்தந்த ஆட்சியர்கள் தெரிவித்து வருகின்றனர். தூய்மையான மாவட்டமாக மாறும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் அடியாக குப்பைகளை குப்பை தொட்டியில் போடும் பழக்கத்தை ஏற்படுத்த முனைகின்றனர். சில கடைகளில் குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் சாலைகளில் வீசி செல்கின்றனர்.
’20 ஆண்டுகளில் முதல்முறை’ – மத்திய அமைச்சர் அதிரடி கைது! நாசிக் போலீசார் நடவடிக்கை!
சாலை ஓரக்கடைகளில் குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் குப்பைகள் அனைத்தும் சாலைகளில் வீசப்பட்டு வருவதால் அதனை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து கடைகளிலும் குப்பைத்தொட்டி வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரங்களில் உள்ள சாலைகளில் குப்பைகள் சேருவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய மாற்றங்கள் அடையாளம் எனும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது குறித்து வேலூர் மாநகராட்சி மாநகர நகர் நல அலுவலர் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் சிவப்பு, பச்சை நிறத்தில் குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும். மேலும் குப்பைகளை தெருக்களில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என கூறினார். அதுமட்டுமின்றி அனைத்து கடைகளிலும் குப்பைத்தொட்டிகள் வைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்,” தெரிவித்து உள்ளார்.