தமிழகத்தில் களைகட்டும் தசரா பண்டிகை – 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்து! மகிழ்ச்சியில் மக்கள்!

0
தமிழகத்தில் களைகட்டும் தசரா பண்டிகை - 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்து! மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் களைகட்டும் தசரா பண்டிகை - 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்து! மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் களைகட்டும் தசரா பண்டிகை – 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்து! மகிழ்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் கர்நாடகாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் தான் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடுதல் பேருந்து:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து அக்டோபர் முதல் வாரம் வரை தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகிறது. சிலர் விஜயதசமி என்பர் சில இடங்களில் தசரா பண்டிகை என்றும் கூறப்படுகிறது. அதிலும் கர்நாடகாவில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படும். மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளை தசராவாக அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அங்குள்ள புகழ்பெற்ற மைசூரு அரண்மனையில் தசராவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். கர்நாடகாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் எனும் ஊரில் தசரா பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அவ்வூரில் உள்ள முத்தாரம்மன் என்ற பிரசக்தி பெற்ற கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பிற மாவட்டங்களில் இருந்து தசராவை முன்னிட்டு மக்கள் வருகை புரிவர்.

செப்.21 ( நாளை) தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு – உஷார் பொது மக்களே!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகம் 4 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் தரிசனத்திற்காக வரவுள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அரசு விரைவு பேருந்து கழகம் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here