வெள்ளத்தினால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!

0
வெள்ளத்தினால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் அவதி!
வெள்ளத்தினால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் அவதி!
வெள்ளத்தினால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!

தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக காய்கறிகளின் விலை கடும் உயர்வினை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 4 மடங்கிற்கும் மேலாக காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

காய்கறிகளின் விலை

தெற்காசிய நாட்டில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக அந்தநாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் விளைந்த பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகிவிட்டன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உணவு பற்றாக்குறையினால் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். மேலும், விலைவாசி உயர்வினால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், நாட்டின் பணவீக்கம் மிகவும் உயர்ந்துவிட்டது. பணவீக்கம் 30% அளவு உயந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சிந்து நதியின் மேற்குக் கரை பகுதியில் வெள்ளத்திற்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை நான்கு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நெய் விலை 400% உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSCயில் மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!

மேலும், பல பகுதிகளில் பால் மற்றும் இறைச்சி விநியோகமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் இந்தாண்டு உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணவீக்கம் அடுத்த இரண்டு மாதங்களில் 30% ஆக அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தினால் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி கிட்டத்தட்ட 1,300 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!