தமிழகத்தில் கனமழை காரணமாக முன்னேற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் கனமழை காரணமாக முன்னேற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கனமழை காரணமாக முன்னேற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கனமழை காரணமாக முன்னேற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திலும் பருவமழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக வெள்ள அபாய முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இந்த பருவமழை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மஹாராஷ்டிர, மும்பை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு பருவமழை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவில் இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர் நிரம்பி வருவதால் ஆற்று ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (செப்.01) விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் விளைநிலங்களில் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மாவட்டம் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அவ்வாறு நடைபெறாமல் இருப்பதாக முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இதற்காக ரூ. 935 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!