ஜி.எஸ்.டி வரி உயர்வால் அரிசி, தானியங்கள் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

0
ஜி.எஸ்.டி வரி உயர்வால் அரிசி, தானியங்கள் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!
ஜி.எஸ்.டி வரி உயர்வால் அரிசி, தானியங்கள் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!
ஜி.எஸ்.டி வரி உயர்வால் அரிசி, தானியங்கள் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் அரிசி, தானியங்கள், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை அதிகரிப்பு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பணவீக்கம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு காரணங்களால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். அது மட்டுமல்லாமல் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது மத்திய அரசு உணவு பொருட்கள் மீதான வரிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அரிசி மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தானியங்கள் உணவு பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. மேலும் இந்த வரி விதிப்பானது 18ம் தேதி(இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி உணவு தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% விதிக்கப்பட்டு அதன் விலை 5 % அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை ரூ.1000 முதல் 2500 வரை நிர்ணயிக்க பட்டிருந்த விலை தற்போது ரூ.1050 க்கு விற்பனையாகிறது. ஒரு மூட்டைக்கு விலை ரூ.50 முதல் 150 வரை அதிகரித்துள்ளது. அதே போல் சில்லரை விலையில் அரிசி 1 கிலோ ரூ.40 லிருந்து ரூ.42 ஆக உயர்ந்துள்ளது. கோதுமையும் 1 கிலோ ரூ.65 க்கு விற்கப்பட்டு வந்தது ரூ.68 ஆக அதிகரித்துள்ளது. இதே போல் 1/2 லிட்டர் தயிர் ரூ.35 க்கு விற்பனை ஆனது ரூ.37 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தேனியில் தனியார் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) விடுமுறை – அதிரடி அறிவிப்பு!

பன்னீர் விலை ரூ.105 லிருந்து 110 ஆக உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் ஏற்கனவே ரூ.130 க்கு விற்பனையானது ரூ.137 ஆக அதிகரித்துள்ளது. காசோலை வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு ரூ.18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. இதனால் காசோலை பெறுவதற்கான கட்டணம் 18% அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12%லிருந்து 18% உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, ஐ.ஆர்.டி.ஏ. செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியற்று இயங்கும் சோலார் வாட்டர் ஹீட்டருக்கான ஜி.எஸ்.டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.5000 மேல் ஒரு நாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கும் 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரி அதிகரிப்பினால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!