எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் கொட்டி கிடைக்கும் வேலைவாய்ப்புகள் – பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, சம்பளம்!

0
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் கொட்டி கிடைக்கும் வேலைவாய்ப்புகள் - பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, சம்பளம்!
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் கொட்டி கிடைக்கும் வேலைவாய்ப்புகள் - பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, சம்பளம்!
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் கொட்டி கிடைக்கும் வேலைவாய்ப்புகள் – பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, சம்பளம்!

மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸில் அதிக அளவிலான பணிகள் இருக்கும் நிலையில், விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், அதிக அளவிலான சம்பளத்துடன் சலுகைகளை பெற உள்ளார்கள்.

எமிரேட்ஸ் பணி வாய்ப்பு:

மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதி வரை 30 நகரங்களில் பணியாளர்களை நியமிக்கப்பட போவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 6,000 பணியாளர்களை புதிதாக பணியமர்த்தி இருந்த நிலையில், அதன் செயல்பாட்டு பணியாளர்களை அதிகரிக்கும் திட்டத்தினை விமான நிறுவனம் வெளிப்படுத்தியது. எமிரேட்ஸ் தனது பணியமர்தலின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, யுகே, கெய்ரோ, அல்ஜியர்ஸ், துனிஸ் மற்றும் பஹ்ரைன் மற்றும் பல ஐரோப்பிய நகரங்களிலும் பணியாளர்களை நியமிக்க உள்ளது.

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒரு வாரம் பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவு!

துபாயின் வளர்ச்சி மையமாக எமிரேட்ஸ் எப்போதும் இருந்து வருகிறது. 6,000 கூடுதல் செயல்பாட்டு பணியாளர்கள் தேவை என்பது துபாயின் பொருளாதாரம் விரைவாக மீண்டும் வருவதை குறிக்கிறது என்று தலைவர் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

தகுதிகள்:

விண்ணப்பதாரர் வாடிக்கையாளர் சேவையில் ஒரு வருடத்திற்கும் மேலான அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதி உயர்நிலை பள்ளி சான்றிதழ் (கிரேடு 12) ஆகும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், அதே சமயம் மற்றொரு மொழியைப் பேசும் திறனும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 160cm உயரமும், நின்ற நிலையில் 212cm உயரத்தை தொடும் வகையிலும் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் துபாயில் இருப்பார்கள் என்பதால், அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வேலைவாய்ப்பு விசா வழிமுறைகளை முறைப்படி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, சமீபத்திய புகைப்படத்துடன் சமர்ப்பிக்கலாம். இதைத் தொடர்ந்து எமிரேட்ஸில் இருந்து ஆன்லைன் தேர்வு வீடியோ நேர்காணலை முடிக்க வேண்டும். மாத அடிப்படை சம்பளம் 4,260 திர்ஹம் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு Dh 61.25 பறக்கும் ஊதியத்தை பெறுவார்கள். சராசரி மொத்த ஊதியம் Dh 9,770 ஆக இருக்கும். பணியாளருக்கு ஆண்டுக்கு 30 நாள் விடுமுறையும், அவர் பிறந்த நாட்டிற்கு ஒரு இலவச வருடாந்திர விடுப்பு டிக்கெட்டும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!