அமெரிக்காவின் ஆட்டம் ஆரம்பம் – ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதல்!

0
அமெரிக்காவின் ஆட்டம் ஆரம்பம் - ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதல்!
அமெரிக்காவின் ஆட்டம் ஆரம்பம் - ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதல்!
அமெரிக்காவின் ஆட்டம் ஆரம்பம் – ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதல்!

ஆப்கான் காபூல் நகரில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பழிவாங்கும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளது. இதற்காக தீவிரவாதிகள் தங்கி இருக்கும் முகாம்கள் மீது ட்ரான் வழி அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ட்ரோன் தாக்குதல்:

ஆப்கானிஸ்தானின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தலிபான் தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15 அன்று கைப்பற்றியதால் அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு தானாகவே வெளியேறி அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனை அடுத்து தலிபான் அமைப்பின் மீது நம்பிக்கை அற்றவர்கள், ஆப்கான் நகரில் இருப்பதை பாதுகாப்பாக உணராதவர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி வந்தனர். இதனால் தலிபான் அமைப்பினர் காபூல் நகரின் காவலை மிகவும் பலப்படுத்தி வைத்திருந்தனர்.

தமிழக அரசின் உதவித்தொகை, வங்கிக் கடன் – சென்னை மாநகராட்சியின் புதிய இணையதளம் தொடக்கம்!

இதனை அடுத்து பிரேசில், ரஷ்யா போன்ற பல நாடுகள் ஜி 7 மாநாட்டில் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டபடி இந்த மாத இறுதியான ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என அறிவித்து இருந்தார். இதனை அடுத்து அமெரிக்க ராணுவம் சார்பில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காபூல் நகரின் விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் பயங்கர சம்பவம் ஒன்று நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

திடீரென நேற்று காலை காபூல் விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில மணித்துளிகளில், பக்கத்தில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது. தாக்குதலில், அமெரிக்காவை சேர்ந்த 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்தது. இதில் ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகளின் பங்கு இருப்பதை அந்த அமைப்பே உறுதிபடுத்தியது. இந்த செயலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம், தேடி வந்து பலி தீர்ப்போம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதை உறுதி செய்யும் விதமாக இன்று அமெரிக்க ராணுவத்தினரால் ட்ரோன் மூலம் தீவிரவாத அமைப்புக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, காபூல் ஆப்கானில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இதில் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!