சென்னை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு – நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்!
குடிநீர் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்வதாக குடிநீர் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் சப்ளை
சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி முதல் செப் 22 ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அண்ணாநகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
எனவே, இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இன்றே போதுமான நீரை சேமித்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தேவை இருக்கும் பொதுமக்கள் குடிநீர் லாரிகள் மூலமாக தேவையான நீரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், குடிநீர் வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்படாதே தவிர தெருக்களுக்கு வழக்கம் போல லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் சேமித்து வைக்கும் நீரை புழு புகாத வண்ணம் பாதுகாக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.