தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – எதிர்க்கும் ஆசிரியர்கள்!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆடை கட்டுப்பாடு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க கூடாது என அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் அதை மீது ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சுடிதார் அல்லது சல்வார் அணிந்து செல்ல, அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் அவர்கள் சேலையில் தான் வர வேண்டும் என சில தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு மின்மீட்டரில் புதிய சிக்கல் – மின்வாரியம் நடவடிக்கை!!
2019ம் ஆண்டு தமிழக அரசு ஆடை கட்டுப்பாடு குறித்து அரசாணை வெளியிட்ட நிலையில், இது குறித்து எந்தவித அறிவிப்பும் பள்ளிகளுக்கு வரவில்லை என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கூறியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் கூறுகையில், நடைமுறைக்கு ஏற்றார் போல வசதியாக இருக்கும் உடையை கண்ணியமாக அணிந்து வரலாம் என தெரிவித்துள்ளார்.