அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – அதிர்ச்சியில் மாணவர்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடு
தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவ கல்லூரியில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு கொள்கை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு கல்லூரியின் வரவேற்பு பகுதிக்கு அருகில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் மாணவர்களுக்கு கடுமையான உடை விதிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டன. அதாவது கல்லூரி நேரங்களில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட், சாதாரண உடைகள், ஷார்ட்ஸ், ஒரு துண்டு ஆடைகள், செருப்புகள் மற்றும் கிளாக்ஸ் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4% சம்பள உயர்வை பெறும் ஊழியர்கள் – ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!
அதே போல மாணவர்கள் கருப்பு தோல் காலணிகளுடன் சட்டை மற்றும் கால்சட்டை கொண்ட முறையான ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் குர்திகள் மற்றும் சல்வார் கமீஸ் அணிய வேண்டும், அதில் துப்பட்டாவை கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் டைட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.