DRDO ஆணையத்தில் ரூ.75,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
DRDO எனப்படும் (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்), CVRDE ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DRDO |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21 days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DRDO காலிப்பணியிடங்கள்:
DRDO ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO வயது வரம்பு :
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் ஓய்வுபெற்ற விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 63 ஆக இருக்க வேண்டும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
India Home Loan Limited- ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
Follow our Instagram for more Latest Updates
Consultant தகுதிகள்:
Consultant பணிக்கு மத்திய/மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு R&D நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். மேலும் DRDO உடன் பணிபுரிந்த அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு / நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
DRDO ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.75,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
DRDO தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Walk-in interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DRDO விண்ணப்பிக்கும் முறை:
Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.